உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 சாட்சி இப்போதே தயார்; ஹேமா அறிக்கை எதிரொலி; வசமாக சிக்கிய பாலியல் குற்றவாளிகள்!

20 சாட்சி இப்போதே தயார்; ஹேமா அறிக்கை எதிரொலி; வசமாக சிக்கிய பாலியல் குற்றவாளிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டியிடம் வாக்குமூலம் அளித்த சாட்சிகள் 20 பேரிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் சாட்சியம் பெற்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு, பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது. ஹேமா கமிட்டி 3896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.இதில் வெறும் 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வாக்குமூலம் அளித்த 20 பேரிடம், இதுவரை சாட்சிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் வழக்கு பதிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கி உள்ளது. சாட்சிகளிடம் முதல் கட்ட விசாரணை செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும். இந்த விசாரணை குறித்து தகவல், அக்டோபர் 3ம் தேதி ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டி தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான சாட்சி அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை, புலனாய்வுக் குழுவில் உள்ள ஐ.ஜி., ஸ்பர்ஜன் குமார், டி.ஐ.ஜி., அஜிதா பீகம், எஸ்.பி.க்.,கள் பூங்குழலி, மெரின் ஜோசப் மற்றும் ஐஸ்வர்யா டோங்ரே ஆகியோர முழு அறிக்கையையும் மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்ய உள்ளனர். சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றால், ஹேமா கமிட்டி அல்லது மாநில கலாசார விவகாரங்கள் துறையிடம் உதவி பெற சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkatesan Ramasamay
செப் 19, 2024 13:30

பட வாய்ப்புக்காக .... காரு பங்களானு செட்டில் ஆன பிறகு குத்துதே கொடையுதுனு பத்தினி வேஷம் போடவேண்டியது


Ram pollachi
செப் 19, 2024 12:28

முலக்கல் வழக்கில் நடந்தது போல இதிலும் தீர்ப்பு வரும்...


ஆரூர் ரங்
செப் 19, 2024 10:32

நம்பி நாராயணன் வழக்கு மாதிரியே இதுவும்? கேரளா கிரிமினல் போலீஸ் அப்படி.


வைகுண்டேஸ்வரன்
செப் 19, 2024 09:23

மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பத்து வருஷம் முன்னாடி நடந்திருக்கக் கூடிய விஷயங்களை விசாரித்து நிரூபித்து யாருக்கு என்ன பிரயோஜனம்??


RaajaRaja Cholan
செப் 19, 2024 10:25

அடுத்து வரும் தலைமுறையிடமாவது மூடிக்கிட்டு இருப்பானுங்க , இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக , வருங்கால தலைமுறைக்கு ஒரு எச்சரிக்கை , அசிங்க படாமல் இருப்பது வாழ்வது எப்படி என்று, பெண்களிடம் /ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்று


sankaranarayanan
செப் 19, 2024 09:21

விசாரணையை தீவிரமாக சேது தவறு செத்தவர்களை தண்டிக்க வேண்டும் இவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது ஆட்சியிலும் டில்லியில் நடந்ததுபோன்று மாற்றம் வேண்டும்


கோவிந்தரா த
செப் 19, 2024 09:20

அப்ப இனித்தது இப்ப கசக்கு தேர


சமீபத்திய செய்தி