உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். இவரை, சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக கூறி, அமலாக்கத் துறை ஜனவரி மாதம் கைது செய்தது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். சம்பய் சோரனை முதல்வராக்க ஏற்பாடு செய்துவிட்டு, சிறைக்கு சென்றார். ஐந்து மாதம் சிறையில் இருந்த அவருக்கு இப்போது தான் ஜாமின் கிடைத்தது. ஜூன் 28ல் வெளியே வந்தார்.ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையில் அதை எதிர்கொள்ள இண்டியா அணி விரும்புகிறது. கடந்த ஜூலை 4ம் தேதி மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று(ஜூலை 08) சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy Sekar
ஜூலை 08, 2024 16:19

பொன்முடிக்கு தண்டனையும் அறிவித்துவிட்டது நீதிமன்றம்..உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு அவரை மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க கட்டளையிட்டது கவர்னருக்கு. இதெல்லாம் சகஜமுங்க.. சாமான்யர்களுக்குத்தான் நீதி எட்டாக்கனி.. பணமிருந்தால் பாதாளத்துக்கு பாய்ந்து தடபுடலாக கொண்டு சேர்க்கும் பதவி கொடுத்து. சோரனிடம் சோரம் போன நீதியா என்று விமர்சனங்கள் காதுபட சொல்லும்போது...எப்படி இருந்த நீதிநிர்வாகம் இப்போ எப்படி ஆச்சு என்று நினைக்கவைத்தது


RAAJ68
ஜூலை 08, 2024 14:43

எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு உத்தமர்கள் போல் பேசுங்க இவர்களுக்கு ஏன் ஜாமீன் கொடுக்கப்படுகிறது என்பது தான் புரியவில்லை. முதலில் தாடியை வெட்டுப்பா ஏதோ காதல் சோகத்தில் இருப்பது போல் விகாரமாக உள்ளது


Lion Drsekar
ஜூலை 08, 2024 13:30

உலகுக்கே தெரியும் லஞ்சம், கைது, விசாரணை, விடுவிப்பு , மீண்டும் அதே பதவி அல்லது அதற்கு மேலுள்ள பதவி, அந்த நாள் முதல் இந்த நாள்வரை இப்படித்தானே . விசாரணைக்கமிஷனில் மாட்டிக்கொள்ளும் நிலைவந்தால் தேர்தல் வரும்போது கூட்டு வைத்துக்கொண்டு ...? இதுதான் இன்றைய நிலைப்பாடு, வந்தே மாதரம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை