உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 1 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்

ரூ. 1 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்

திலக்நகர்: மாணவர்களை குறிவைத்து இயங்கி வந்த போதைப் பொருள் கும்பலை போலீசார் கைது செய்தனர். 1 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஹம்ப்ரி முவோங், 33, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சுக்வு எபுகா உமே, 36, ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 700 கிராம் உயர் ரக ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் கல்வி பயில்வதாகக் கூறி ஆப்பிரிக்க நாட்டினரை இந்தியாவிற்கு அழைத்து வந்து, இங்குள்ள மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் நைஜீரிய நாட்டவரான டாக்ரி ஜீன் மார்க் என்ற சர்வதேச குற்றவாளியின் அறிவுரைபடி செயல்பட்டு வந்துள்ளனர்.திலக் நகர் பகுதியில் இருந்து இவர்கள் பெரிய வலையமைப்பை உருவாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை