மேலும் செய்திகள்
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
2 hour(s) ago | 1
பெங்களூரு : ''வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.எல்.சி., மதுவின் கேள்விக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சட்ட மேலவையில் நேற்று பதிலளித்து பேசியதாவது:ஏப்ரல் 2019க்கு முன் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில், எச்.எஸ்.ஆர்.பி., எனும் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்துவது கட்டாயம்.மாநிலத்தில் 2023 ஆகஸ்ட் 18, முதல் இம்மாதம் 12ம் தேதி வரை, மொத்தம் 18,32,787 வாகனங்களில் எச்.எஸ்.ஆர்.பி., பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு பலகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாநிலத்திலும் பலகைகள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2019க்கு முன் மாநிலத்தில் 2.45 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், இதுவரை 9.16 சதவீத வாகனங்களில் எச்.எஸ்.ஆர்.பி., பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்தி, வாகனங்களில் பதிவு எண் பலகை பொருத்துவதற்கு வசதியான இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்ப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளரால் பொருத்தப்படுகிறது. மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி விரைவில் உத்தரவிடப்படும்.எச்.எஸ்.ஆர்.பி., பதிவு எண் பலகை பொருத்தா விட்டால், முதல் முறை 500 ரூபாயும்; இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த முறைகளுக்கு, தலா 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் பதிலளித்தார்.
2 hour(s) ago | 1