உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோதல் நிறைந்த உலகில் ஹிந்து மதம் தேவை: மோகன் பகவத்

மோதல் நிறைந்த உலகில் ஹிந்து மதம் தேவை: மோகன் பகவத்

நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது: மோதல்கள் நிறைந்த இன்றைய உலகுக்கு ஹிந்து மதம் தேவை. ஏனெனில் அது பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, நிர்வகிப்பது என்பதை கற்பிக்கிறது. உலகம் முழுதுக்கும் இந்த மதம் தேவை. பன்முகத்தன்மையை நிர்வகித்து, எவ்வாறு வாழ்வது என உலகத்துக்கு தெரியாததால் தான் பல மோதல்கள் நடக்கின்றன. இந்தியர்களை பொறுத்தவரை மதம் என்பது உண்மையை தவிர வேறில்லை. இந்த மதம் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன் பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்கிறது. ஹிந்து மதம் இயற்கையின் மதம்; இது உலகளாவிய நம்பிக்கை; மனிதகுலத்தின் மதம். ஒவ்வொரு இதயமும் இந்த மதத்தால் விழித்தெழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மூர்க்கன்
ஆக 07, 2025 17:18

அப்படியே அந்த சாதி பத்தியும் பேசுங்க ???


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 22:13

அட்வென்டிஸ்ட் இப்படியா ?


Rathna
ஆக 07, 2025 16:56

ஹிந்து மதம் என்று ஒன்று இல்லாவிட்டால், பாலைவன மத அக்ரமங்களில் இந்த நாட்டு மாட்டி கொண்டு அழிந்து போய் இருக்கும். அதுதான் 900 ஆண்டுகள் மொஹலாயர்களாலும், ஆங்கிலேயர்களால் நடந்தது. மேற்கு ஆசியாவை பாருங்கள் - குழந்தைகள் மத காரணங்கள் மற்றும் தீவிரவாதத்தால் தினமும் பசியால் சாகிறார்கள். ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தானை பாருங்கள் - பெண் குழந்தைகள் மத காரணங்கள் மற்றும் தீவிரவாதத்தால் படிக்க முடியவில்லை. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திக்காக அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். மதம் என்ற காரணத்தால் ஒருவரும் பசியால் சாவதையோ அல்லது மானபங்கம் செய்யப்படுவதையோ அனுமதிக்க கூடாது.


beindian
ஆக 07, 2025 15:45

ஆனால் அடுத்தவன் என்ன சாப்பிட்டான் என்று அவன் வீடுவரைக்கும் சென்று பார்போம்


மூர்க்கன்
ஆக 07, 2025 17:18

அதுதாம்ல சனாதனம் ??


T.sthivinayagam
ஆக 07, 2025 15:38

ஆன்மீக சமுகநீதி தேவை


மூர்க்கன்
ஆக 07, 2025 17:19

வாய்ப்பு இல்ல ராசா ??


பிரேம்ஜி
ஆக 07, 2025 07:46

இவர் யாரு ? அப்பப்ப மக்கள் கஷ்டம் தெரியாம எப்போ பார்த்தாலும் மதத்தை பற்றியே பேசுகிறார்? மக்களுக்கு அறிமுகம் இல்லாத இவர் நியூஸ் மற்றும் படம் தினமலரில் மட்டுமே வருகிறது! என்ன விளம்பரம் செய்தும் எடுபடாத ஆசாமி இவர்!


மூர்க்கன்
ஆக 07, 2025 17:20

என்ன கொடும சார் இது?? பிரேம்ஜி வெர்சன் ??


Oviya Vijay
ஆக 07, 2025 07:02

மோதல் உருவாவதே உங்க மாதிரி ஆளுங்கள்னாலே தானேப்பூ... நீங்க எல்லாம் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா நாடே அமைதியா இருக்கும்ல... இத எப்போ தான் புரிஞ்சிப்பீங்களோ...


N Sasikumar Yadhav
ஆக 07, 2025 07:48

உலகில் நடப்பது சிலுவைப் போர் மற்றும் பயங்கரவாத இசுலாமியர்களின் ஜிகாத் . இந்துமதம் எங்கேயும் போரை திணிப்பதில்லை திரு கோபாலபுர கொத்தடிமையாரே


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 22:15

எனது மதமும் , பாலைவன மதமும் ஆள் சேர்ப்பு என்று அலையும்போது , இயற்கையை அதோடு போக்கில் விட்டு வணங்கும் இந்து மதம் தவறா ஓவியா ? பைபிளில் , குர்ஆனில் ஐந்து பெரும் இயற்கையை வணங்குவது எப்படி என்று சொல்லியுள்ளார்களா , இல்லை தனிமனித துதியை சொல்லியுள்ளார்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை