டில்லியில் வரலாறு 26 ஆண்டுகள் கழித்து திரும்பும்; பா.ஜ. நம்பிக்கை
இந்தூர்; புதுடில்லி சட்டசபை தேர்தலில் 26 ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்பும் என்று மத்திய பிரதேச மாநில பா.ஜ., தலைவர் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தலைநகர் புதுடில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.8) வெளியாகிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நிச்சயம் மாற்றம் உண்டு என்பது பா.ஜ.,வின் நம்பிக்கையாக இருக்கிறது.இந் நிலையில், மத்தியபிரதேச மாநில பா.ஜ., தலைவர் வி.டி. சர்மா, நிச்சயம் தலைநகரை பா.ஜ., கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தூரில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது; புதுடில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வரலாறு 26 ஆண்டுகள் கழித்து டில்லியில் திரும்பும். பா.ஜ., அமோக வெற்றி பெற்று அரியணையில் ஏறும். அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.வுக்கே வெற்றி கிடைக்கும்.மக்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இப்போது புதுடில்லியை முன்னேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இம்முறை நாங்கள் வரலாற்று வெற்றியை பதிவு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.