உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்.ஐ.வி பாதித்த 828 மாணவர்கள்: திரிபுராவில் ‛திடுக்

எச்.ஐ.வி பாதித்த 828 மாணவர்கள்: திரிபுராவில் ‛திடுக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.எச்.ஐ.வி என்னும் எய்ட்ஸ் தொற்றை குணமாக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதேநேரத்தில், இந்த நோயை கட்டுப்படுத்த சில மருந்துகள் இருக்கின்றன. இந்த கொடிய நோய் மாநிலத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரவியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொற்று பரவியது எப்படி

?புகாருக்கு உள்ளான 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் போதைக்கு அடிமையாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் எச்.ஐ.வி பரவியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajesh
ஜூலை 10, 2024 21:59

உனக்கு BJP யை இளுக்கவில்லை என்றால் தூக்கம் வராது


Senthoora
ஜூலை 10, 2024 16:41

போதை பாவனையின் போது ஒரே ஊசியை பலநாட்கள் பலர் மாரி, மாரி பாவிப்பதால், அதோடு அதை பாவிக்கும் முக்கியமாக, ஆண் நபர்கள் போதை ஏற்றிய பின் ஓரின செர்க்கையில் ஈடுபடுவதால் இந்த HIV இவர்களுக்கு வரும், ஏண்டா போதை மாத்திரை வாங்க பணம் இருக்கு, சில்லறையில் ஊசி வாங்க பணமில்லையா? நான் பலகாலமாக நகோட்டின் பிரிவில் வேலை செய்திருக்கிறேன் சிங்கப்பூரில், அங்கே நடந்த ஆய்வில் வந்த உண்மை.


என்றும் இந்தியன்
ஜூலை 10, 2024 16:27

HIV உள்ள பெண்ணிடம் உடல் உறவு கொள்ளும்போது மட்டும் தான் அது வரும்???HIV உள்ள ஒருவர் உபயோகித்த ஊசி பலர் அதையே உபயோகித்தால் கூட வரும். வெறும் ஒரே ஊசி பலர் உபயோகித்தால் வரவே வராது


தமிழ்வேள்
ஜூலை 10, 2024 15:44

திருச்சபைகள் பெரும்பான்மையடைந்தால் , இதுதான் கதி. ....தேவாயலத்துக்கு வெளியே வந்தால் , எதுவானாலும் ஓகே தான் ....


J.Isaac
ஜூலை 10, 2024 15:20

பிஜேபி ஆளும் மாநிலந்தானே


Senthoora
ஜூலை 10, 2024 16:32

தமிழகத்தில் நடந்திருந்தால் உங்க நிலைமை என்னாவது?


Senthoora
ஜூலை 10, 2024 16:35

நீங்களும் தப்பினார்கள், தமிழகமும் தப்பியது.


Kundalakesi
ஜூலை 10, 2024 15:12

திரிபுர மாடலுக்கு நம்ம திராவிட மாடல் எவளோ தேவலை


J.Isaac
ஜூலை 10, 2024 17:23

இதைவிட மோசம் உ.பி மாடல்.


ganapathy
ஜூலை 10, 2024 13:36

பெற்றோர் ஊர் மேய்ந்தால் பிள்ளைகள் இப்படித்தான் வளரும்


Muralidharan S
ஜூலை 10, 2024 13:30

மாணவ சமுதாயத்தை வைத்துதான் இந்தியா 2047 ல் வல்லரசு ஆகா முடியும்.. இந்தியா முழுவதும் மாணவ மற்றும் இளைஞர் சமுதாயம் இப்படி சீரழிவதை பார்க்கும்போது, இதை ஒழிக்க அரசாங்கங்கள் கடும் நடவடிக்கை எடுக்க முன்வராத போது இந்திய வல்லரசாக வாய்ப்பே இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிடும். ஆட்சிகள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அதிகாரிகள் அனைவருக்கும் முழு சுதந்திரம் குடுத்து நிலைமையை சீர்படுத்த வேண்டும்.


Sakthi Sakthiscoops
ஜூலை 10, 2024 12:57

நல்ல ஆட்சியாளர்கள் தேவை. குழந்தைகள் மன அமைதி, ஆரோக்கியம் பேணப்பட வேண்டும்


மேலும் செய்திகள்