உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைனில் புக் செய்தால் வீட்டில் டெலிவரி: போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது

ஆன்லைனில் புக் செய்தால் வீட்டில் டெலிவரி: போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது

சிம்லா: ஆட்களை நேரில் சந்திக்காமல், ஆன்லைன் வாயிலாக புக் செய்தால், வீட்டுக்கு அருகிலேயே குறிப்பிட்ட இடங்களில் போதைப் பொருட்களை அனுப்பி வைக்கும், மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.வட மாநிலங்களில், குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் மிகப் பெரிய போதைப் பொருள் பரிமாற்றம் நடப்பது தொடர்பாக, அம்மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தும் முக்கிய குற்றவாளியான சந்தீப் ஷா என்பவர் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் கைது செய்யப்பட்டார். அவருடைய முக்கிய கூட்டாளியான நீரஜ் கஷ்யப் என்பவர் தெற்கு டில்லியின் மெஹ்ரோலியில் கைது செய்யப்பட்டார்.இது குறித்து, சிம்லா எஸ்.பி., சஞ்சீவ் குமார் காந்தி கூறியதாவது:போதைப் பொருள் தேவைப்படுவோர், ஆன்லைன் வாயிலாக புக் செய்தால் போதும். அவர்களுடன், 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படும். அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே, அவர்கள் குறிப்பிடும் இடத்துக்கு போதைப் பொருள் அனுப்பப்படும். மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்தியதுடன் போதைப் பொருள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இந்தப் போதைக் கடத்தல் கும்பலில், 500க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.முக்கிய குற்றவாளியான சந்தீப் ஷா உள்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருள் கிடைக்கிறது என்பது உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஜன 31, 2025 18:41

டிஜிட்டல் புரட்சி நடக்குது. எல்லாம் சுலபமா கிடைக்குது.


Azar Mufeen
ஜன 31, 2025 12:59

எதுக்கெடுத்தாலும் அந்த மதம், இந்த மதம் என்று குறை சொல்வதை விட்டு போதை பொருட்களை அழிக்க வழி செய்யுங்கள்


Ramesh Sargam
ஜன 31, 2025 12:55

தமிழகத்தில் பணம் கொடுத்தால் வீடுதேடிவந்து வாயிலேயே ஊட்டிவிடுகிறார்களாம்.


Ramalingam Shanmugam
ஜன 31, 2025 12:33

ஹா ஹா நம்ம அமைதி மார்க்கம் தான் வழி காட்டுகிறது


nisar ahmad
ஜன 31, 2025 10:59

சனாதனம் இதைதான் கற்றுகொடுக்கிறதா போதை பொருள் மூலம் சமுதாயத்தையே நாசப்படுத்தும் ....


VENKATASUBRAMANIAN
ஜன 31, 2025 07:35

இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ஒரு தலைமுறையை கெடுக்கிறார்கள். நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும்


Svs Yaadum oore
ஜன 31, 2025 07:07

வட மாநிலங்களில், என்ன ஆன் லைன் டெலிவெரியில் போதைப் பொருள் பரிமாற்றம்?? இதுக்கெல்லாம் முன்னோடி முன்னேறிய திராவிட மாநிலமான விடியல்.. சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது, 12 கிராம் மெத்தபெட்டமைன், 24 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.


Kasimani Baskaran
ஜன 31, 2025 07:06

இதுகளையெல்லாம் நேரடியாக கழுவேற்ற வேண்டும். தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் போதைப்பொருள் விநியோகிப்போருக்கு மரண தண்டனை கொடுப்பது போல இந்தியாவிலும் சட்டம் கொண்டு வரவேண்டும்.


Barakat Ali
ஜன 31, 2025 06:46

கைதானவர்களில் ......


Barakat Ali
ஜன 31, 2025 06:46

கைது மாணவர்களில் ஒருவர் சேட்டு... இன்னொருத்தர் மார்வா ......


Keshavan.J
ஜன 31, 2025 10:07

Main supplier will be surely .......


சமீபத்திய செய்தி