உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடு டூ அலுவலகம் : வெற்றிப்பேரணிக்கு தயாராகும் பிரதமர் மோடி

வீடு டூ அலுவலகம் : வெற்றிப்பேரணிக்கு தயாராகும் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாளை (ஜூன் 4) தேர்தல் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பா.ஜ., அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ., கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வென்று, நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக வந்துள்ளதால் பா.ஜ., தரப்பு குஷியாகியுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கையின்போது மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் கிட்டத்தட்ட தெரிந்துவிடும். முடிவுகளில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பா.ஜ., தலைமை அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த பேரணியில் பா.ஜ.,வினர் பெருமளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதீஷ்குமாருக்கு அமைச்சர் பதவி?

பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடியை நிதீஷ்குமார் சந்திக்க இருக்கிறார். மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும், இதற்காக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

முதல் தமிழன்
ஜூன் 03, 2024 21:29

அலுவலகம் டு வீடு ...இதுதான் நாளை முடிவு.


mohamed salim Abdullahhussaini
ஜூன் 03, 2024 19:45

They desire for this hat trick victory Because of rapid development in infrastructure and all other sectors


A1Suresh
ஜூன் 03, 2024 19:11

உதயநிதிக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும்.


Sundaran
ஜூன் 03, 2024 18:13

Modi will win with a thumbing majority. As in arunachal pradesh congress will get in single degit.


Palanisamy Sekar
ஜூன் 03, 2024 17:32

மக்கள் பரிசாக தரப்போகிறார்கள். ஊழல் இல்லாத தலைவர், ஓய்வறியாத பிரதமர், தெளிவான சிந்தனை, பாகுபாடில்லாத, பாரபட்சமில்லாமல் அணைத்து மாநிலங்களையும் அரவணைத்து செல்கின்ற பெருந்தன்மை, இது போதாதா பிரதமரின் செல்வாக்கு கூடுமே தவிர ஒருக்காலும் குறையாது. ஆனால் எதிராணியிலோ ஊழலில் சிக்கிய கும்பல், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், மனைவி பிள்ளை என்று அவர்கள் பெயரில் சொத்து சேர்த்த கொள்ளையர்கள் நிறைந்த இண்டி கூட்டணியை எப்படி மக்கள் விரும்புவார்கள்? வாக்கு இயந்திரத்தின் மீது பழிபோட்டு நாளைக்கு சாலை மறியல் என்றும் இந்தியா பந்த் என்று அறிவித்து இந்த வெற்றியை கொச்சைப்படுத்த போகிறார்கள். ஏனென்றால் கம்யூனிஸ்ட் உள்ள கூட்டணியில் இதனை தவிர என்ன எதிர்பார்க்க முடியும்? உலகத்தலைவர்கள் வரிசையில் மோடிஜியே முதன்மையான தலைவராக உருவாகி உலக அரங்கில் மோடிஜியின் சேவை இன்னும் தேவைப்பட போகிறது. பிரதமரின் ஆலோசனையை உலக தலைவர்கள் எதிர்பார்ப்பது உறுதி.


mohamed salim Abdullahhussaini
ஜூன் 03, 2024 19:41

Yes


Lion Drsekar
ஜூன் 03, 2024 17:07

அமைதியாக தியானம் எய்தாலே தையா தக்கா என்று குதித்துக்கொண்டு இருக்கும் எங்கள் நாட்டில் வெற்றிப்பேரணிக்கு தயாராவதா ? மீண்டும் ஒரு போராட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் அளவுக்கு தித்திட்டம் போடுவார்கள் . ஒரு விதத்தில் அரசியல் கட்சியில் இருப்பவர்களை கொண்டாடலாம் . வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்ற பாடலுக்கு ஏற்ப , எந்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாது . மொத்தத்தில் சூடு, சுரணை, ரோசம், வெட்கம், மானம், இருந்தால் மனிதனாக வாழ்வது மிக மிக கடினம் . எந்த பதவியில் இருந்தாலும், எந்த துறையில் இருந்தாலும் கண் பார்க்கவேண்டும் ஆனால் அது மனதில் பதியக்கூடாது, காது கேட்கவே கூடாது , வாய் பேசாமல் இருந்தால நிம்மதியாக வாழலாம் என்பது அரசியல் கட்சிகளிடம் நாம் படிக்கவேண்டிய பாடம் . வந்தே மாதரம்


Ramanujadasan
ஜூன் 03, 2024 16:58

வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்


venugopal s
ஜூன் 03, 2024 16:53

இ வி எம் மெஷின் மீது இத்தனை நாட்களாக எனக்கு சந்தேகம் வரவில்லை. அதேபோல் பாஜக எல்லா வட இந்திய ஆங்கில ஹிந்தி மீடியாக்களையும் வளைத்துப் போட்டதையும் சந்தேகப் படவில்லை.ஆனால் இப்போது இது இரண்டுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சிறியதாக ஒரு சந்தேகம் எழுகிறது.மீடியாக்கள் மூலமாக போலியான ஒரு கருத்துக் கணிப்பை உருவாக்கி பிறகு இ வி எம் மெஷின்களையும் ஹேக் செய்து யாருக்கும் சந்தேகம் வராதது போல் தேர்தல் முடிவுகளை கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்றாற்போல் செய்து விடுவார்கள் என்று தோன்றுகிறது! வெற்றி பெற வேண்டி எதையும் செய்யக் கூடியவர்கள் ஆயிற்றே!


Ramanujadasan
ஜூன் 03, 2024 17:23

கொஞ்சம் சிந்தித்து இருந்தால் இப்படி தப்பு தப்பாக நினைக்க தோன்றாது . அந்த இயந்திரங்கள் எல்லாம் தனி தனி எந்திரங்கள். நெட்ஒர்க் கிடையாது . எப்படி ஹேக் செய்ய முடியும் ? விட்டால் ஒவ்வொரு இயந்திரத்திலும் மோடியும் அமித் ஷாவும் இரவில் சென்று ஹேக் செய்து விட்டார்கள் என்றெல்லாம் திராவிடர்கள் போல கற்பனை செய்து விடுவீர்கள் போல


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 03, 2024 17:27

தமிழ்நாட்டில் திமுக அதிக இடங்களில் வென்றாலும் அதே தானா. இல்லை இங்கே குட்டி கரணம் அடிப்பாயா


Vaduvooraan
ஜூன் 03, 2024 17:57

புதுசா ஏதாச்சும் யோசிச்சு சொல்லுங்க இந்த மாதிரி காமடி பண்ணாதீங்க..ப்ளீஸ்


chandrakumar
ஜூன் 03, 2024 18:03

ஏன் ஒரு கட்சியின் தலைவர் அதுவும் பத்து ஆண்டுகள் பாரதத்தின் பிரதமர் வெற்றிபெற்றால் கொண்டாட கூடாதா? செய்தியினை முழுவதும் படித்துவிட்டு கருத்தினை பதிவிடலாமே.... பெரும்பான்மை வெற்றி பெற்றால் பேரணி என்றுதான் செய்தியிருக்கின்றது...


ராமகிருஷ்ணன்
ஜூன் 03, 2024 18:31

அசல் திமுக தான் இப்படி யோசிக்க முடியும்.


rajangam ganesan
ஜூன் 03, 2024 18:54

வெள்ளையா இருக்குமே சோறு ,


மேலும் செய்திகள்









புதிய வீடியோ