உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lhmmo8gs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம்.நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை, பெரும்பாலான மண்டலங்களில் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூ்ன் வரை 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.தற்போது, வட மற்றும் கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில், வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.நாடு அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலை நாட்களை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோடை காலத்தில் 9 முதல் 10 சதவிகிதம் வரையிலான கூடுதல் மின்சார தேவை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saran
மார் 31, 2025 23:44

We destroy the nature to live. We buy the automobile for our luxury purpose. We put the air conditionner in the House and office to keep the temperature low. So we are responsible for the air pollution so we have to suffer.


Mediagoons
மார் 31, 2025 20:34

அனைத்தும் இந்து மதவாதிகள் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிக்க போர் தொடுக்கும் மாநிலங்கள்


Appa V
மார் 31, 2025 19:45

பொதுமக்கள் பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும்.இந்த நேரங்களில் டாஸ்மாக் திறந்து வைத்திருப்பது அவசியமா ?மக்கள் நலனுக்காக மூணு மாசம் மது விற்பனை நிறுத்தலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை