உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனித்துவமாக இயங்கி வருகிறார். 'நமோ' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, நாட்டு மக்களின் கருத்துக்களை, அவர் அவ்வப்போது கேட்டு வருகிறார்.கடந்த மாதம், 'நமோ' செயலியில், பா.ஜ., அரசு மற்றும் எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து அறிய, 'ஜன் மேன் சர்வே' என்ற சர்வே துவங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'கடந்த, 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் நம் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'நமோ' செயலியில், 'ஜன் மேன் சர்வே வாயிலாக, உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, பிரதமர் மோடியின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை