உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உற்பத்தியே இல்லை பொருட்களை எப்படி வாங்குவது? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

உற்பத்தியே இல்லை பொருட்களை எப்படி வாங்குவது? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

'நாடு முழுதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிந்து கிடக்கிற நிலையில், இந்திய பொருட்களை வாங்கும்படி மக்களிடம் கூறினால், அவர்களால் எப்படி முடியும்' என, காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து டில் லியில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா நேற்று கூறியதாவது:

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ளது. இது, நம் நாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவு. இதற்கு பிறகு தான், 'மேக் இன் இந்தியா' என்ற கோஷத்தையும், இந்திய பொருட்களை வாங்குங்கள் என்ற பிரசாரத்தையும் கையில் எடுத்துள்ளனர். ஆனால், நாடு முழுதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துகிடக்கின்றன. அப்படி இருக்கையில், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே, மக்களால் எப்படி வாங்க முடியும்? முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரிந்து கொண்டிருப்பதை அனைவரும் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். அரசு இதற்கு என்ன பதில் தரப்போகிறது? இவ்வாறு, அவர் கூறினார். -நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Subash BV
ஆக 29, 2025 11:31

Congress is projecting themselves as pessimistic party. They have forgotten how ssi and cottage industries struggled to survive during their era. Now Bharat is flourishing. USA Just an another country in the world. Why worry about TRUMPS tariff, export to other nations which was not serviced till date. WORLD IS VERY LARGE. IMPROVE YOUR MARKETING SKILLS. PUT THE BHARAT FIRST.


James Mani
ஆக 28, 2025 16:20

ப்ரஹ்மோஸ் ராக்கெட்


Nanchilguru
ஆக 28, 2025 13:08

இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் போல, டிரம்ப் போல பேசுகிறார்


BALA SUBRAMANIAN
ஆக 28, 2025 06:59

உற்பத்தியே இல்லை என்றால் நாம் எதற்கு அமெரிக்கா வரி விதித்தால் கவலை பட வேண்டும், அப்படி போனா இப்படி வரது இப்படி போனா அப்படி வரதே காங்கிரஸ்காரன் வேலை


Sudha
ஆக 27, 2025 15:27

மேலே இன்றைய சிரிப்பு என்று தலை ப்பிடுங்கள்


கண்ணன்
ஆக 27, 2025 12:10

ஐயா, நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? செய்தித்தாட்களைப் படிக்கத் தெரியுமா? அல்லது இன்னும்2013 லேயே இருக்கிறீர்களா?


Anand
ஆக 27, 2025 11:58

உற்பத்திக்கு பெயர் போன காசாவில் இருந்து தப்பி வந்து காங்கிரஸில் இணைந்தவர் போலிருக்கு.


Balamurugan
ஆக 27, 2025 10:28

இந்த காங்கிரஸ் காரனுகளுக்கு எல்லாவற்றையும் அரசியலாக்குவதே வேலை. நாட்டின் மீது உண்மையான அக்கறை இல்லை.


D Natarajan
ஆக 27, 2025 07:31

இவனை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவில் இருக்க லாயக்கற்றவன்


Subramanian
ஆக 27, 2025 06:29

They also keep lying but could not succeed. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாய் ஆகி விடுமா


சமீபத்திய செய்தி