உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் எத்தனை நாள் காங்கிரசை விமர்சிப்பீர்கள்: பிரியங்கா கேள்வி

இன்னும் எத்தனை நாள் காங்கிரசை விமர்சிப்பீர்கள்: பிரியங்கா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன் : ‛‛ இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள்'' என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை. 10 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ., இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக்கூறுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும். சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால், இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Bhakt
ஏப் 16, 2024 22:38

இந்தியாவை சுரண்டிவிட்டு "சுதந்தரத்திரிக்கு பின்னரும் பிரித்து ஆண்டு அடிமையாக வைத்திருக்கு பிரிட்டிஷ்காரன் ஆரம்பித்ததே காங்கிரஸ் அது ஒழியும் வரை இது தொடரும்


Bahurudeen Ali Ahamed
ஏப் 16, 2024 18:45

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பெறச்செய்த காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் மக்கள் , கடந்த பத்து வருடம் ஆட்சி செய்து ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் கோடி கடன் வைத்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலாளியை விமர்சனம் செய்ய மனது வரவில்லையே ஏன்


Bhakt
ஏப் 16, 2024 22:35

மூளையும் முக்கா


ellar
ஏப் 16, 2024 09:33

நீங்கள் கேட்பது நியாயம் தான் எப்படியோ இன்னொரு மூன்று மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் அதற்குப்பின் காங்கிரஸ் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இருக்காது


veeramani
ஏப் 15, 2024 09:29

காங்கிரெஸ் கட்சி இன்னும் நேரு, காந்தி, சாஸ்திரி போன்றவர்களின் பெயரை சொல்லாமல் இனிமேலும் இருக்க முடியுமா? அன்றைய காலகட்டத்தில் லட்சுமண முதலியார் அவர்கள்தான் சென்னை ஐ ஐ டி வர காரந கர்த்தாக இருந்தவர் மேலும் ஐ எஸ் ஆர் ஒ வருவதற்கு முக்கியமானவர் விக்ரம் சாராபாய் அவர்கள் அறிவியலிலும் கல்வியிலும் நேர்மையிலும் ஒப்பில்லாதவர்கள் உருவாக்கிய டேபர்ட்டன்ட்களை நேரு செய்தது என தயவுசெய்து பொய் சொல்லவேண்டாம் நீங்கள் பிறந்ததே இல்லை அன்று


Indhuindian
ஏப் 15, 2024 04:50

இன்னும் கொஞ்ச நாளைக்குதான் எப்படியும் காங்கிரஸ் காணாம போயிடும் அதுக்கு நீங்கல்லாம் ஓவர் டயம் ஒர்க் பண்றீங்க அதனாலே கூடிய சீக்கிரமே விமர்சனம் பண்ண கட்சி இல்லாம போயிடும் அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கோ திரு மோடி அவரைகளை மௌத் கி சௌதகர், சாய் வாலா, லிஸ்ட் நீட்டுகிட்டே போகும் அப்போவெல்லாம் கொஞ்சமாவது யோசிசீன்களா அது வுங்கமேலயே பாயும் ஆனா அது உங்க தப்பு இல்லை சிந்திக்கிறதுங்கறது காங்கிரஸ்ல கிடையாது வெறும் மண்டைய ஆட்டறது மட்டும்தான்


கண்ணன்
ஏப் 14, 2024 12:03

உங்கள் குடும்பத்தினர் யாவரும் கடையினை மூடிவிட்டு இத்தாலிக்குப் போகும் வரை விமர்சனங்கள் இருக்கும் அக்கா


Rajasekar Jayaraman
ஏப் 14, 2024 08:53

இத்தாலி கொள்ளை கூட்டம் பாரதத்தை விட்டு ஒழியும்வரை தொடரும்.


Guna Gkrv
ஏப் 14, 2024 07:30

பிஜேபி நாட்டை கூறு போட்டு வித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு சப்போர்ட் பொறுத்திருந்து பாருங்கள் இந்தியா எங்க போக போகுது என்று அப்பொழுது தெரியும் இந்த வியாபாரியை பற்றி


N SASIKUMAR YADHAV
ஏப் 14, 2024 04:38

பாரதநாட்டிற்கு ஊழல்மிகு கான்கிராஸ் செய்த துரோகம் நூறாண்டுகளானாலும் தீராது அந்தளவிற்கு நாட்டுக்கும் இந்துக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது கான்கிராஸ்


K.Ramakrishnan
ஏப் 13, 2024 22:28

அவர்களின் வாய்க்கு காங்கிரஸ்தானே அவல் பல் இருக்கும் வரை பழிச்சொல் வரத்தான் செய்யும்


மேலும் செய்திகள்













புதிய வீடியோ