உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி?: தீர்மானிப்பது நான் அல்ல: நிர்மலா சீதாராமன் பதில்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி?: தீர்மானிப்பது நான் அல்ல: நிர்மலா சீதாராமன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல. நிதி ஆணையம் தான் தீர்மானிக்கிறது' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். லோக்சபாவில் காங்., எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுகிறது என குற்றம் சாட்டினார். இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசியதாவது: பிடித்த மாநிலம் மற்றும் பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை ஒதுக்குவதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி தர வேண்டும் என்பதை நிதி ஆணையம் தான் தீர்மானிக்கிறது. அனைத்து மாநிலங்களோடும் ஆலோசித்து, அறிக்கை தருகிறது. அதையே நான் பின்பற்றுகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.இதையடுத்து 2024-25ம் ஆண்டிற்கான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி