உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்

ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்

ஹூப்பள்ளி: ''ஹுப்பள்ளி - புனே இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை, பிப்., 2ம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும்,'' என, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.இது தொடர்பாக, தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:பிப்., 2ம் தேதி முதல் வாரத்தில் நான்கு விமானங்கள் ஹூப்பள்ளியில் இருந்து புனேவுக்கும்; புனேயில் இருந்து ஹுப்பள்ளிக்கும் இயக்கப்படும்.இந்த விமானத்தை இண்டிகோ விமான நிறுவனத்தின் 'இண்டிகோ 6இ' விமானம் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளை ஹுப்பள்ளியில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, 6:10 மணிக்கு புனே சென்றடையும்; மறுமார்க்கத்தில் அன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, ஹூப்பள்ளிக்கு இரவு 7:30 மணிக்கு வந்தடையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை