உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

புதுடில்லி: சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை வேட்டையாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலமான 'மினி சுவிட்சர்லாந்து' எனப்படும் பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்த பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நடவடிக்கைகள்

இதையடுத்து, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா சென்றிருந்த நம் பிரதமர் மோடி, தன் பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பினார். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து நேற்று காலை அவர், டில்லி விமான நிலையம் வந்தார்.உடனடியாக, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார்.உடனடியாக, ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை, காஷ்மீர் போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து ஜம்மு -- காஷ்மீர் டி.ஜி.பி., நளின் பிரபாத், விளக்கினார்.இந்நிலையில், தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் காஷ்மீர் சென்றனர்.என்.ஐ.ஏ., அமைப்பின் ஐ.ஜி., தலைமையிலான குழு ஒன்று ஸ்ரீநகரில் இருந்து நேற்று பஹல்காம் சென்றது. பஹல்காமில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு, அவர்களுக்கு அமித் ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்தார். அப்போது, 'குற்றவாளிகள் ஒருவரைக் கூட தப்பிக்க விட மாட்டோம்,' என அவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.அதைத் தொடர்ந்து, தாக்குதல் நடந்த, பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளி பகுதிகளையும் அமித்ஷா நேற்று பார்வையிட்டார்.

தப்பிக்க முடியாது

பின்னர், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், 'பயங்கரவாதத்துக்கு பாரதம் ஒருபோதும் அடிபணியாது. இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர்கூட, தப்பிக்க முடியாது என உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இந்த நாட்டுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.'பஹல்காமில், தங்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தவர்களின் வேதனையை ஒவ்வொரு இந்தியர்களும் உணர்கின்றனர்; அதை வார்த்தைகளால் கூற முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக ஜம்மு -- காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று அறிவித்தார்.படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, ராணுவ விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று மாலை நடந்தது.அதில், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்புக்கும், அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தவிர்த்த மோடி

பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை, பிரதமரின் விமானம் தவிர்த்த தகவல் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு புதுடில்லியில் இருந்து பிரதமர் மோடி சென்றபோது, அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்து சென்றது. ஆனால், சவுதி அரேபிய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு, நேற்று அதிகாலையில் மீண்டும் இந்தியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டபோது, பாக்., வான்வெளி வழியாக அவரது விமானம் வரவில்லை. மாறாக, ஜெட்டாவில் இருந்து ஓமன் வழியாக அரபிக்கடலின் மீது பறந்து, நம் நாட்டின் குஜராத், ராஜஸ்தான் வான்வெளி வழியாக டில்லிக்கு பிரதமரின் விமானம் வந்தது.

திரும்புகிறார் நிர்மலா

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசிப்பதற்காக ராணுவ விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அடுத்தடுத்து இந்த கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இந்த அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ள, ஐந்து அமைச்சர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர். ஏப்.20 முதல் 11 நாட்களுக்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெரு ஆகியவற்றுக்கு சென்றார். தற்போது, பயங்கரவாத தாக்குதலையடுத்து, சுற்றுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, இந்தியாவுக்கு அவர் திரும்புவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று அனைத்து கட்சி கூட்டம்

இந்த விவகாரம் குறித்து டில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Velan Iyengaar
ஏப் 24, 2025 09:46

கோவிட் சமயத்தில் மூன்று வருடங்களுக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை.. சேனையின் பலம் 1,80,000 அளவுக்கு குறைந்து உள்ளது யாருடைய யோசனை இது? எதற்கு அந்த சமயத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை? இப்போது முஷ்டியை முறுக்குவது எதற்கு? ரிஸ்க் குறித்த அளவீடு செய்து தான் 3 வருடங்களுக்கு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டதா? காஷ்மீரில் தேனாறு பாலாறு ஓடுவதாக நினைத்து இரண்டு செக்டர் வேலையை ஒரு செக்டரிடம் விதித்தது யாருடைய யோசனை? கடந்த முறை கூட தரை வழியாக படையை அனுப்பவேண்டாம் விமானம் மூலம் அனுப்ப கூறியபோது செலவுக்கு பயந்து தரைவழியாக துணை ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளுக்கு இரை கொடுத்தார்கள். அதை அவர்களின் கவர்னரே பொதுவெளியில் பேட்டி கொடுத்து அம்பலப்படுத்தினார். இப்போது ஆட்குறைப்பு செய்து ரெண்டு ராணுவ வீரர் வேலையே ஒருவரிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்கள். பாதுகாப்பு குறைபாடு அவர்களே ஏற்படுத்திக் கொண்டு களநிலவரம் தெரியாமல் போலியான மாயை உருவாக்கிவிட்டு இப்போது அப்பாவி உயிர்களை பலிகொடுத்து இதையும் அரசியல் சித்துவிளையாட்டுக்கு இந்த கேடுகெட்ட கும்பல் உபயோகப்படுத்தும் ....


ஆரூர் ரங்
ஏப் 24, 2025 12:51

ஏவுகணை, சாட்டிலைட் உளவு, DRONE காலத்தில் லட்சக்கணக்கில் காலாட்படைக்கு ஆளெடுப்பு எதற்கு? எங்கயாவது மனநிலை சரியில்லாத ஆள் கிறுக்கியதை காப்பி பேஸ்ட் செய்யணுமா?


Velan Iyengaar
ஏப் 24, 2025 13:32

அப்போ சுத்தமா ஆளே எடுக்காம நிறுத்திடலாமே ??


vivek
ஏப் 24, 2025 14:38

இதுக்கு நீ சிட்னியில் ..........


SRITHAR MADHAVAN
ஏப் 24, 2025 09:42

அன்புள்ள மோடிஜி, நமது அப்பாவி இந்தியர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நான் என் குடும்பத்திற்காக 58 ஆண்டுகள் வாழ்ந்தேன், எனக்கு போதுமானது இப்போது என் அன்பான இந்தியாவிற்காகவும் இந்திய மக்களுக்காகவும் நான் இறக்கத் தயாராக இருக்கிறேன். இந்திய அரசிடமிருந்து எந்த இழப்பீடும் அல்லது பரிசீலனையும் எனக்கு வேண்டாம். என் நாட்டு மக்களும் இந்திய மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காக நான் என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.... நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்ல விரும்பினால், எங்கள் ராணுவத்தில் ஏதேனும் மனித வெடிகுண்டுப் படை இருந்தால், தயவுசெய்து என்னை இந்திய ராணுவத்தில் சேர அனுமதிக்கவும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அழித்து என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.


mei
ஏப் 24, 2025 09:10

முதலில் இங்கிருக்கும் மதமாறிகளை அடித்து துரத்துங்க


நல்லதை நினைப்பேன்
ஏப் 24, 2025 09:08

உடனடியாக ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவை. நாதாரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டும்


பாமரன்
ஏப் 24, 2025 08:48

நீங்களும் பட்டா தான் தெரியும்...


பாமரன்
ஏப் 24, 2025 08:44

துர்சம்பவம் நடந்து ரெண்டு நாள் ஆச்சு... நடத்தியது மூன்று பேர்ன்னு சந்தேகிக்கப்படுகிறது.... ரிப்பீட்... சந்தேகம் தான்... இதில் பாகிஸ்தான் இன்வால்வ்மெண்டை ப்ரூஃப் பண்ணற மாதிரி எந்த ஸ்டேட்மெண்டும் இதுவரை வரலை... யார்மேல் அதிரடி நடவடிக்கை தெர்ல...யாரோ மூன்று பேர் என்கவுண்டர் ஆகப்போறாங்கன்னு மட்டும் புரிகிறது... சீக்கிரம் முடிச்சா ஜி பிகார்க்கு போய் பொய் பிரச்சாரம்.... ச்சே தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்....


சத்யநாராயணன்
ஏப் 24, 2025 10:09

ஓஹோ நீங்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற போர்வையில் நீங்கதான் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களா


thehindu
ஏப் 24, 2025 08:37

தும்பை விட்டு வாலை பிடிப்பதா ?


Shankar
ஏப் 24, 2025 07:52

நாடு சுதந்திரம் அடைந்த சமயம் இந்துக்களோடு சேர்ந்து வாழமுடியாது என்று பாக்கிஸ்தான் உண்டானது. பாகிஸ்தான் வேண்டும் ன்னு ஓட்டு போட்டவன் எல்லாம் இங்க தீவிரவாதியா திரியுராங்க பாக்கவே பயம் வர மாதிரி டிரஸ் போட்டுகிட்டு. இந்த தீவிரவாதிகள மெதல்ல களையேடுங்க இங்கேயே பல கோடி தீவரவாதிங்க இருக்காங்க. அவங்கள ஒழித்து தள்ளுங்க புண்ணியமா போகும்


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 07:35

முதலில் உள்நாட்டில் இருக்கிற ,சாம்பிராணி புகையர்களை கண்டறியவும் . அவன் தான் உள்ளிருந்தே நமது நடவடிக்கைகளை அந்நியதேசத்திற்கு குயித்தி புத்தியால் விற்று காசாக்குபவன். கள்வனை பிடிச்சு லாடம் அடிங்க எசமான். சந்தேகம் இருந்தால் காசு செலவு செய்து அடிலெய்டு அய்யாசாமியை தொடர்பு கொண்டு கேட்கிற விதத்தில் நன்கு கவனித்தால் உண்மையை கக்குவான் .


Naga Subramanian
ஏப் 24, 2025 07:30

முதலில் உள்நாட்டிலுள்ள, ஓட்டிற்காக மைனாரிட்டியே பிரதானம் என்று நாட்டையே துண்டாட நினைக்கும் சமூக விரோத போக்கு கொண்டவர்களை வேட்டை யாட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை