மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
14-Sep-2024
மைக்கோ லே - அவுட்: மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை, போலீசார் தேடுகின்றனர்.பெங்களூரின், பி.டி.எஸ்., லே - அவுட்டில் வசிப்பவர் சையத் ஜமீர், 45. இவர் பெயின்டிங் வேலை செய்கிறார். இவரது மனைவி சையத் சமீரா, 40. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சில நாட்களாக குடும்ப பிரச்னையால், தம்பதிக்கு இடையே தகராறு நடந்தது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணியளவில் தம்பதிக்கு வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த சையத் ஜமீர், துப்பட்டவால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.சமீராவின் சகோதரர், மைக்கோ லே - அவுட் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.
14-Sep-2024