மேலும் செய்திகள்
டில்லியில் பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை
3 hour(s) ago | 10
ஹைதராபாத்: துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு EK 526 என்ற எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு ஒரு இ மெயில் வந்தது.மிரட்டலை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு குழுவினர் உடனடியாக செயலில் இறங்கினர். ஹைதராபாத் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்புடன் விமானம் இறக்கப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கினர்.அனைத்து பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தனிமைப்படுத்தினர். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். நேற்றைய தினம், மதீனா-ஹைதராபாத் விமானத்துக்கு இருமுறை இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக, அந்த விமானத்தை அதிகாரிகள் குழுவினர், ஆமதாபாத்திற்கு திருப்பி விட்டனர்.
3 hour(s) ago | 10