மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பெங்களூரு: ''நான் அரசியலுக்கு வரவில்லை,'' என்று நடிகர் டாலி தனஞ்ஜெய் அறிவித்துள்ளார்.கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் டாலி தனஞ்ஜெய், 37. இவருக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையில் நட்பு உள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக டாலி தனஞ்ஜெய்யை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின.இது குறித்து, பெங்களூரில் டாலி தனஞ்ஜெய் நேற்று அளித்த பேட்டி:நான் சினிமா துறையில் உள்ளேன். எனது சினிமா வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். சினிமா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட போவதாக, தகவல்கள் பரவியுள்ளது. யார் இப்படி கூறினர் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago