உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசு என்னங்க பெரிய காசு; அமெரிக்க யூடியூபரிடம் டிப்ஸ் வாங்க மறுத்த இந்திய டிரைவர்; வீடியோ வைரல்!

காசு என்னங்க பெரிய காசு; அமெரிக்க யூடியூபரிடம் டிப்ஸ் வாங்க மறுத்த இந்திய டிரைவர்; வீடியோ வைரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க யூடியூபரிடம் ரூ.8500 டிப்ஸ் வாங்க இந்திய டிரைவர் மறுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.உலக சுற்றுப்பயணங்களை நேரடியாக ஒளிபரப்பி வரும் அமெரிக்க யூடியூபர் ஜெய்ஸ்ட்ரீஸி. அவர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு டிரைவராக இருந்தவரிடம் ஒரு நாளைக்கு டிரைவர் மற்றும் வழிகாட்டி வேலைக்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5m55zsbg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு அவர் 1250 ரூபாய் என்று கூறுகிறார். ஆனால் தான் அவருக்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறிக்கொண்டு யூடியூபர் 8,500 ரூபாய் கொடுக்கிறார். ஆனால் அந்தத் தொகையை டிரைவர் வாங்க மறுத்து விடுகிறார். பலமுறை வற்புறுத்தி கொடுத்தும் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். 'இது மிகப்பெரிய தொகை. எனக்கு இவ்வளவு பெரிய தொகை தேவையில்லை' என்று நேர்மையுடன் கூறுகிறார் அந்த டிரைவர்.தனது நேர்மையால் கவனத்தை ஈர்த்த அந்த டிரைவர் பணத்தை வாங்க மறுக்கும் வீடியோவை அமெரிக்க யூடியூபர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.பெரிய தொகையை தர முயன்ற போது அதிர்ச்சி அடைந்து டிரைவர் வாங்க மறுக்கும் காட்சி, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இந்த வீடியோவை பார்வையிட்ட லட்சக்கணக்கான பேர், அந்த டிரைவரின் நேர்மையை பாராட்டி உள்ளனர்.உழைக்காமல் வரக்கூடிய பணத்துக்கு ஆசைப்படாத இந்த நேர்மை தான் பல்வேறு தரப்பினர் கவனத்தை வீடியோ பெற்றதற்கு காரணம்.இந்திய டிரைவரின் நேர்மை மற்றும் பணிவைப் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை குவித்து வருகின்றனர். இப்போதெல்லாம் இது ஒரு அரிய காட்சி. அவருக்குப் பணம் தேவையில்லை என்பதல்ல. ஆனால் அவர் அதை சம்பாதித்ததாக அவர் உணரவில்லை. இதனால் அவர் பணத்தை வாங்க மறுக்கிறார் என சமூகவலைதளத்தில் பயனர்கள் பதிவிட்டனர். இந்த இந்திய டிரைவரின் செயலை பாராட்டி உங்களது கருத்துகளை பதிவிடுங்கள் மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Padmasridharan
ஆக 29, 2025 05:45

ஏமாத்தல, திருடல, இது நேர்மையும் அல்ல.. அறியாமை. எவ்வளவோ பொய்கள் சொல்லி அரசதிகாரிகள் அதிகார பிச்சையெடுக்கையில் அன்பாக கொடுத்த பணபரிசு கொடுத்ததை பெற்றிருக்கலாம். எனினும் அவருடைய கொள்கை அவருக்கு திருப்தி அளித்திருக்கிறது. நன்று சாமி


Kumar Kumzi
ஆக 28, 2025 12:06

கறார் கட்டிங் கமிஷன் ஓங்கோல் அப்பா இது


N.Purushothaman
ஆக 28, 2025 11:35

இதே திருட்டு திராவிடனா இருந்திருந்தா அந்த ஆளுக்கே தெரியாமல் அவுங்களோட சொத்தையே ஆட்டையை போட்டு இருப்பான் ..நேர்மையை பூத கண்ணாடி போட்டு தேடும் நிலைமையில் தான் இந்த உலகம் இன்று இருக்கிறது ...


Rathna
ஆக 28, 2025 11:29

இலவசமும் ஊழல் தான். இதையே அவர் வசதி இல்லாதவர்களிடம் எதிர்பார்ப்பார். உதாரணமாக ஹோட்டல்களில் டிப்ஸ் என்னும் ஊழல் தலை தூக்கி உள்ளது. சாப்பிட்ட பில் தொகையில் 3-5% வழங்குவது கட்டாயமாக்கப்படுகிறது. இதை வழங்காதவர்களுக்கு சில ஹோட்டல்களில் சர்வர் பக்கத்தில் கூட வருவதில்லை.


KRISHNAN R
ஆக 29, 2025 03:24

உண்மை


Madras Madra
ஆக 28, 2025 11:00

இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே சோம்பேறிகள் அதிகமாகி கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்த பண்புகள் பாராட்டி உழைப்பின் உயர்வு இளைய தலை முறைக்கு புரிய வைக்கப்பட வேண்டும் இந்த டிரைவர் இந்தியாவின் அடையாளம்


பாரத புதல்வன்
ஆக 28, 2025 10:13

அந்த டிரைவர நம்ம அப்பா கிட்ட சேர்த்து விடுங்க.... நல்லது நடக்குமான்னு பார்ப்போம்.


Senthoora
ஆக 28, 2025 10:00

ஒரு மனிதனின் உண்மை, நேர்மையை பாராட்ட உங்களுக்கு மனசு இல்லை. நாட்டில் நல்லவர்களும் இருக்கிறாங்க.


angbu ganesh
ஆக 28, 2025 09:33

இதுவும் ஒரு விளம்பரம்தான் லைக் வாங்க என்ன என்ன பொய் சொல்லி வாழவேண்டி இருக்கு இது உண்மையான பதிவு என்றல் hats up


V.Mohan
ஆக 28, 2025 09:23

முக்கியமாக,அரசியல்வாதிகளால், நம் நாட்டு மக்களை தாக்கியுள்ள லஞ்சம், இலவசம் மற்றும் சாமர்த்தியமாக சம்பாதிப்பது போன்ற கொடிய விஷ நோய்கள் அடிப்படையான ஒழுக்கத்தையும், மனித மனங்களையும் கெடுத்துள்ளது. அந்த டாக்ஸி ஓட்டுனரின் நியாய உணர்ச்சி இந்திய குடும்பங்களின் பரம்பரை சொத்தாகும். காலம் காலமாக வந்து கொண்டிருக்கும் கலாசார மேன்மையின் அடையாளம். அந்த அடிப்படை உணர்வை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கவர்ச்சி அரசியலுக்காக இழப்பது தமிழினத்துக்கு ஏற்படும் அவமானம். தயவு செய்து தமிழர்கள் தங்களது அடிப்படை நியாய உணர்வை புறக்கணிககாமல் இருக்க கடவுள் நம்பிக்கையை இறுகப்பற்ற வேண்டும். இல்லாவிடில் எதன் மீதும் பயமற்று நாசமடைய வேண்டியது தான்.


KRISHNAN R
ஆக 29, 2025 03:29

அரசியல் சுரண்டல் செய்ய தருவது தான் இலவச,,இன்வெஸ்ட் மென் டு.... அது நோயாகி விட்டது


vbs manian
ஆக 28, 2025 09:21

இதுதான் இந்தியா மண்ணின் ஆணி வேர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை