உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு மோடி பதிலடி

புதுடில்லி: நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன், ஹரியானா பா.ஜ., எனக்கு விஷம் கொடுக்குமா? என ஆம்ஆத்மி குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். டில்லியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., அரசு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. எனக்கு சொந்த வீடு இல்லை. ஆனால் ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. கண்ணாடி அரண்மனை கட்டி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பவர்களால் ஏழைகளின் வீட்டைப் பற்றி சிந்திக்கவே முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g293na3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொய் குற்றச்சாட்டுடில்லிக்கு வரும் தண்ணீரில் ஹரியானா மக்கள் விஷம் கலக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகிறார்கள். இது ஹரியானாவுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்குமான அவமானம். தண்ணீர் கொடுப்பதை புனிதமாக கருதும் நாடு இது. இந்த நாட்டு மக்கள் மீது இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இப்படி முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு இந்த முறை டில்லி மக்கள் பாடம் கற்று கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இது தவறானது!டில்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது கேவலமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.தோல்வி பயத்தில் ஆம்ஆத்மி உள்ளது. ஹரியானா மக்களின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் டில்லியில் வசிக்க வேண்டாமா? ஹரியானா மக்கள் தங்கள் சொந்த குழந்தைகளின் தண்ணீரில் விஷம் கலக்க முடியுமா? நான் அதே தண்ணீரை தான் குடிக்கிறேன். நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே தண்ணீரை தான் குடிக்கிறார்கள். ஹரியானா மக்கள் தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக நினைப்பது தவறானது. சுத்தமான குடிநீர்தவறுகளை மன்னிப்பது இந்திய குடிமக்களின் தாராள குணம்.இவர்கள் யமுனையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மூன்று தேர்தல்களில் ஓட்டு கேட்டனர். ஆனால் இதுவரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் திட்டங்களை நிறுத்துபவர்கள் அல்ல. திட்டங்களுக்கு உத்வேகம் கொடுப்பவர்கள்.இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள ஏழை, எளியவர்களின் வீடுகளுக்குக் குடிநீர் சென்றடையும். டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை பா.ஜ.,அரசால் வழங்க முடியும்.11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடித்து, வரும் 30 ஆண்டுகளுக்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதனால்தான் டில்லி மக்களிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன். டில்லிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாடு முழுவதும் என்னால் நிறைய செய்ய முடிந்தது. ஆனால், டில்லியில் பணியாற்ற நீங்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நீங்கள் 25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆட்சியை பார்த்திருக்கிறீர்கள். இப்போது பா. ஜ., வுக்கு ஓட்டளியுங்கள். சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிலர் 14 ஆண்டுகள், சிலர் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இன்னும், அதே போக்குவரத்து நெரிசல், அதே அசுத்தம், அதே உடைந்த சாலைகள் காணப்படுகின்றன. மக்கள் குடிநீருக்காக ஏங்குகிறார்கள். டில்லியின் கோடிக்கணக்கான குடிமக்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
ஜன 29, 2025 22:28

உங்களுக்கு கிடைக்கும் வசதிகள் எவ்வளவு என்று புரியும் படி சொல்ல முடியுமா


veera
ஜன 30, 2025 07:48

கட்டுமரம் குடும்பம் அனுபவிக்கும் வசதிகளை விட குறைவே.....


K.n. Dhasarathan
ஜன 29, 2025 17:13

பிரதமர் சந்தடி சாக்கில் நகைசுவை பேசுகிறார், இவர் எங்கே டெல்லியில் இருக்கிறார் ? பெரும்பாலும் விமானத்தில் பாராப்பார், பிரீயாக இருக்கும்போது, டெல்லியோ பாராளுமன்றமோ வருவார், பேருக்கு கொஞ்ச நேரம், அடுத்து, இவர் சொந்த வீடு இல்லாத ஏழை என்கிறார், சொந்தமாக அரசு தனி விமானம் 5500 கோடி மதிப்பில் வைத்துள்ளார், எந்த பிரதமரும் இதுபோல இல்லை, பரம்பரை பணக்கார நேரு குடும்பத்தில் கூட இப்படி இல்லை, அப்புறம் எதற்கு நடிப்பு, மக்களுக்கு தெரியும், உங்கள் போட்டோ சூட் முதற்கொண்டு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், இனி பதிலடித்தான், இனி பொய்கள் கூற முடியாது, எந்த ஒரு சர்வாதிகார நடவடிக்கையும் இனி செல்லாது.


gune
ஜன 29, 2025 17:46

200 ரூபாய் கிடைக்கும் என்பதால் வாயில் வந்ததை புளுகுவீர கூத்தாடி


ஆரூர் ரங்
ஜன 29, 2025 19:24

உண்மையில் அந்த உயர் பாதுகாப்பு உள்ள விமானத்தை ஆர்டர் செய்தது மன்மோகன் அரசுதான். (அதுவும் இட்டாலி யம்மாவின் பாதுகாப்பான பயணத்துக்காக என்கிறார்கள்)


Barakat Ali
ஜன 29, 2025 19:26

அறிவாளி சார் ....... தனி விமானம் மோடியின் தனியுரிமை அல்ல ..... யார் பிரதமரானாலும் பயன்படுத்தலாம் ..... உன் துக்ளக்கார் ஏன் ராகுலை பிரதமர் ஆக்கவில்லை ????


Barakat Ali
ஜன 29, 2025 16:59

கெஜ்ரிவால் நம்பிக்கை வைத்த மக்களின் மனதில் மிக இறங்கிவிட்டார் .....


Shankar
ஜன 29, 2025 18:29

இறங்கவில்லை...இறக்கிவிட்டார் .


ஆரூர் ரங்
ஜன 29, 2025 15:51

இதில் என்ன கொடுமை என்றால் கெஜரிவால் பிறந்தது அதே ஹரியானாவில்தான். சொந்த மக்களையே இழிவுபடுத்தும் நபர்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 29, 2025 18:56

சொந்த மக்களையே இழிவுபடுத்தும் நபர் அவர் மட்டுமா? அனைத்து பாஜக ஆதரவு வாசகர்களும், நீங்கள் உட்பட, சொந்த மக்களையே இழிவுபடுத்தும் நபர்கள் தான். யோசித்துப் பாருங்கள். டாஸ்மாகிநாடு, டுமீலர், டுமீல்நாடு, கோட்டர் பிரியாணி, ஊபிஸ்...oh God.. You guys disrespect your own co-citizrns, with no patriotism.


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2025 21:22

ஆகா ... ஆகா ... தேசப்பற்று - Patriotism - பற்றியெல்லாம் மூர்க்க காட்டேரி பேசுதே ? ஆகா ...


சமீபத்திய செய்தி