உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி

வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நயா ராய்ப்பூர்: '' நான் வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இதனால் பிரதமராக பதவியேற்ற பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நயா ராய்ப்பூர் பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.14,260 கோடி மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.இதனைத் தொடர்ந்து மோடி பேசியதாவது: சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டதற்கு முன்பும் இந்தப் பகுதியை பார்த்துள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் பயணத்தை பார்த்து வருகிறேன். சத்தீஸ்கர் மாநிலம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. வறுமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இதனால், பிரதமரான பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன்.கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுதும் 125 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்தது. தற்போது 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் ஆதிக்கம் உள்ளது. நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு வருகின்றனர். நக்சல் பாதிப்பில் இருந்து நாடு முற்றிலும் விடுதலை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.2000ம் ஆண்டுக்கு பிறகு சத்தீஸ்கரில் அனைத்து தலைமுறையும் மாறியுள்ளது. அதற்கு முன்பு அப்படி யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். மாநிலம் உருவாக்கப்பட்ட போது, கிராமங்களை அணுகுவது எளிதானது இல்லை. கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் இருந்தன. ஆனால் இன்று மாநிலத்தில் சாலை இணைப்பு 40 ஆயிரம் கி.மீ., தாண்டியுள்ளது.மக்களின் வாழ்க்கையில் உள்ள இடர்பாடுகளை அகற்ற அரசு பாடுபட்டு வருகிறது. இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய வசதியும் கிடைக்கிறது. சாதாரண குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு கனவாக இருந்தது. ஒரு வீட்டக்கு புதிதாக இணைப்பு பெறுவதை பார்த்த மக்கள், தங்களது வீட்டுக்கும் அப்படி இணைப்பு வராதா என ஏங்கினர். உஜாலா திட்டம் மூலம் கேஸ் இணைப்பு கிராமங்களை அடைந்துள்ளது. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது காஸ் இணைப்பை தாண்டி ஒவ்வொரு வீட்டு சமையல் அறைக்கும், குடிநீர் கிடைக்க செய்து வருகிறோம். பைப் மூலம் குறைந்த விலையில் கேஸ் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 21:41

பரம ஏழை. பல லட்சம் கோடி ரூபாய் கார்பப்பரேட் கடனை தள்ளுபடி செய்வதில் கர்ணன். ஏக்கர் ஒரு ரூபாய் என்று பல்லாயிரம் ஏக்கர்களை அதானிக்கு வழங்குவதில் பாரி வள்ளல்.


kumaran
நவ 01, 2025 21:30

மோடி அவர்களை போன்று எளிமையான, ஒழுக்கமும் ஊழல் இல்லாத ஒரே ஒரு அரசியல்வாதியை கை காட்டுங்கள் பார்க்கலாம். உலகமே இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பாராட்டுகிறது ஆனால் சில கிணற்று தவளைகளுக்கு தெரியவும் புரியவும் இல்லை


Matt P
நவ 01, 2025 21:22

வறுமையை அருகில் இருந்து பார்த்தேன் என்கிறார். கருணாநிதி எம்ஜிஆர் சிவாஜி எல்லோரும் வறுமையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். வறுமையிலிருந்து பார்த்தாலும் சரி வாழ்ந்தாலும் சரி பொது வாழ்க்கை என்றால் அவர்கள் நிலையிலே நம்மை நினைத்து கொண்டு அவர்களுக்கு உதவும்படி இருக்க வேண்டும். அரசியல் வழியாக பதவிக்கு வந்துவிட்டால் எல்லாபடிகளும் கிடைத்து இலவச வண்டி,இலவச வீடு இலவச உணவு கூடஒய்வு வூதியம். கடைசி மூச்சு வரை அப்படி இருந்து மக்கள் பணத்தில் மக்களுக்காக செலவழிப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். பதவி கிடைத்து உயர்ந்து விட்டால் திருட்டு வேறு. . படித்து உண்மையாக உழைப்பவர்கள் கூட இவர்கள் மாதிரி பணம் சம்பாதித்து குடும்பம் நடத்த முடிவதில்லை. யார் எப்படி உயர்ந்தாலும் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துவது அவர்கள் மனநிலையும் வளர்ந்த விதமும். அடுத்தவர்களுக்கு கொடுத்து அதில் சுகம் கண்டு முடிவதே தன வாழ்க்கை என்ற நிலை வந்தால் நாமும் நலம் பெறுவோம். நாடும் நலம் பெறும் .


K.n. Dhasarathan
நவ 01, 2025 21:08

பதவிக்கு வரும்போது அனைவரும் ஏழை என்றுதான் வருகிறார்கள், அதன் பின் ? பிரதமர் இப்போது அவரது நண்பரை இந்தியா வின் நம்பர் 1 பணக்காரர் ஆக்கினார், 600 வது இடத்தில் இருந்த அந்த நண்பர் இப்போது உலக பணக்காரர் ஆவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. இவர் மட்டும் சும்மாவா? இவரது உடை தைப்பவருக்கு தையல் கூலி லட்சங்களில் கொடுக்கிறார், வெளி நாட்டு மூக்கு கண்ணாடி, இறக்குமதி செய்யப்பட்ட கார், எந்த பிரதமரும் வைத்துக்கொள்ளாத தனி விமானம், ஆனால் பேசுவது மட்டும் ஏழைகளை பற்றி. மக்களே ஏமாந்து விடாதீர்கள், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று .


Rathna
நவ 01, 2025 20:36

பக்கத்து வீடுகளில் வேலை செய்து வறுமையின் உச்சியில், தனது பல குழந்தைகளை காப்பாற்றி வளர்த்த ஒரு நல்ல தாயின் தவப்புதல்வர் இவர்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 21:38

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று மோடி சொல்ற அளவுக்கா ஓட்டுவீங்க?


R. SUKUMAR CHEZHIAN
நவ 01, 2025 20:28

இங்கு ஒரு கார்ப்பரேட் குடும்ப முன்னோடி திருட்டு ரயிலில் சென்னை வந்து இன்றளவும் அந்த குணம் மாறாமல் அதன் வாரிசுகளும் கடைபிடிக்கின்றன. 200 ரூபாய் கொடுத்தால் வாங்கி கூலிக்கு அதிகமாக குரைப்பதக்கும் கடிப்பதற்கும் ஒரு கூட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளது அந்த திருட்டு ரயில் கார்ப்பரேட் குடும்பம்.


Narayanan Muthu
நவ 01, 2025 20:25

தற்போதும் மக்களின் வறுமையை அருகிலிருந்துதான் பார்த்து க்கொண்டிருக்கிறீர்கள்.


Nathansamwi
நவ 01, 2025 19:54

வறுமையை பார்த்ததுலனால தான் என்னவோ நம்ம ஜி பணமதிப்பிழப்பு, கிஸ்தி இந்தமாரி நடவடிக்கை எல்லாம் ஏழை மக்களுக்காக செய்து உள்ளார் பாவம் ...


Ravi Kumar
நவ 01, 2025 19:49

வாழும் வீட்டை விட்டு தனி ஆளாய் வெளியே வந்து, காசிக்கு போய் , இருந்து , பின்பு மீண்டும் வந்து உலகத்து அனுபவம் மக்களுக்கு சொல்லியவர்கள் , மஹாகவி பாரதியார், தந்தை பெரியார், மற்றும் நரேந்திர மோடி அவர்கள் ......உண்மையில் சிவ கடாக்ஷம் பெற்றவர்கள் ......


Rathna
நவ 01, 2025 20:34

யாருக்கும் யாருக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.. அதிலே சிவ கடாக்ஷம் என்று வேற எழுதுகிறீர்கள்.


Palanivelu Kandasamy
நவ 01, 2025 19:14

"வறுமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்"- ஆனால் ஒன்றும் செய்யவில்லையோ?


சமீபத்திய செய்தி