உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி கவர்னரின் மகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு

மாஜி கவர்னரின் மகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு

சண்‌டிகர்: தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலாவின் மகன் வீட்டில் இன்று வரிமானவரித்துறையினர் அதிடி ‌ரெய்டு நடத்தினர். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தொழிலதிபர்கள் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகார், பஞ்ச்கோலா, ஜிராக்பூர்,மொஹாலி உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மனோகர்சிங் என்ற தொழிலதிபர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தொழில் பங்குதாரராக ககஜித்சிங் உள்ளார்.ககன்ஜித்சிங், முன்னாள் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் ஆவார். இந்நிலையில் இவரது வீட்டிலும் ‌வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ம‌னோகர்சிங்கும், ககன்ஜித்சிங்கும் தொழில் பாட்னர்களாக உள்ளனர். அதன் பேரில் மாஜி கவர்னரின் மகன் வீட்டில் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை