உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்: டிரம்ப் பளிச்

நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்: டிரம்ப் பளிச்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்:'உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும். நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன்' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: உயிர்களை காப்பாற்றுவதே இறுதி இலட்சியம். முடிந்தால் நான் சொர்க்கத்திற்கு செல்ல முயற்சிக்க விரும்புகிறேன். உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும். உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் ஒரு வாரத்திற்கு 7 ஆயிரம் பேர் கொல்லப்படுவதை தடுக்க முடிந்தால் அது மிகவும் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அமெரிக்க மக்கள் உயிரை இழக்கவில்லை. அமெரிக்க வீரர்களை இழக்கவில்லை. ஆனால் உங்களுக்கு தெரியும். ஏவுகணைகள் தவறான இடங்களை தாக்கும் போதோ, உக்ரைனில் பல்வேறு நகரங்களில் வீசப்படும் போதோ, ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்கள் சிலரை இழக்கிறோம். இவ்வாறு அமெரிக்க அதிபர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 22:43

இஸ்ரேல் ஹமாஸ் பற்றி பேசவேயில்லை அமெரிக்க அதிபர் அங்கும் தான் மக்கள் சாகிறார்கள் அமெரிக்கா பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் தான் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கிறது அதுவும் தவறு தானே.


Ganesh
ஆக 22, 2025 10:24

என்னங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க? ஹமஸ், காசால அரிய வகை கனிமங்கள் இருக்கா? உக்ராயின் ல இருக்கு.. சண்டை போட்டுக்கிட்டு இருந்தா எப்படிங்க நாங்க எடுக்குறது... லோக்கல் வியாபாரி எல்லாம் என் கழுத்தை பிடிக்கிறாய்ங்க... சீனா காரன் வேற கழுத்தை நசுக்கிறான்... எவனுமே நமக்கு இருக்குற அவசரத்தை புரிஞ்சிக்க மாட்டேங்குறாய்ங்க... அப்புறம் அழுதுடுவேன் ஆமா...


M Ramachandran
ஆக 20, 2025 20:14

உங்க அமெரிக்காவில் துப்பாக்கிகலாச்சாரம் தலை விரித்தாடிக்கொண்டிருப்பதால் உங்க விருப்பம் உடனே சீக்கிரம் 13$ டாலர் மதிப்பில் உள்ள துப்பாக்கியால் நிறை வேறும்.


M Ramachandran
ஆக 20, 2025 20:11

அண்ணனால் ஒரு கருத்தில் நிலையாக நிற்கமுடியாது. செலன்ஸ்கியை முடிக்காமல் விட போவதில்லை. ஓய்வதில்லை. முதலில் நானும் புட்டினும் நண்பர்கள் என்றார். புடினும் காமெடி என்று ரசித்து விட்டு சென்றார். விவரம் புரியாத செலான்ஸ்கியை வரவைத்து கழுத்துமேல் கத்தி வைத்தார். அவரும் வலிக்காத மாதிரி நடித்து ஓடி வந்தார். இப்போது அவர் மனதிலோடுவது உலக மகா தலைவர் பட்டம்.


Sekar
ஆக 20, 2025 15:44

அமெரிக்கா ஆளுமைகளால் எய்தப்படும் அம்பு இவர். RIC கூட்டமைப்பை உடைத்தெடுக்க வளர்ந்து வரும் நாடாக இருக்கும் இந்தியாவை சிறுமை படுத்தி வெளியே கொண்டு வர நாளும் பல முயற்சிகள். தற்போதைய வல்லரசுகள் உலகில் நாம் வல்லரசாக எழுச்சி பெற காலத்தின் கட்டாயமாக்கி உள்ளனர். நமக்கு இப்பொழுது தேவை எவரையும் சார்ந்திராத அனைத்து துறைகளிலும் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுடன் கூடிய மிக அபரிதமான வளர்ச்சி. நாம் மிகவும் எச்சரிக்கையாக செயல் பட வேண்டிய காலம் இது. நம்மை தற்காத்து கொள்ளவேண்டிய மேலும் வளர்த்து கொள்ள வேண்டிய தருணம் இது. அதே சமயம் வல்லரசுகள் உருவாக்கும் சதி வலைகளில் நாம் மாட்டி கொள்ளாமல் இருக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 20, 2025 15:24

72 லட்டு தின்ன ஆசையா? அதுக்கு வேற ஆளப் பாரு.


மொட்டை தாசன்...
ஆக 20, 2025 15:17

பெரியண்ணன் அவர்களே , அதுக்கெல்லாம் புண்ணியம் செய்திருக்கவேன்டும்


Barakat Ali
ஆக 20, 2025 14:43

போய்ச் சேரு .......


SUBRAMANIAN P
ஆக 20, 2025 14:19

செய்த பாவம் கொஞ்சமா நஞ்சமா, யோசிச்சுப்பாரு. உனக்கு எப்படி சொர்கம் கிடைக்கும்.


Madras Madra
ஆக 20, 2025 13:44

அமெரிக்காவால் கொல்லப்பட்ட உயிர்கள் எல்லாம் என்ன ? உயிர் இல்லையா


N Srinivasan
ஆக 20, 2025 13:40

யார் சொன்னா ? உனக்கு எண்ணெய் கொப்பரைதான் ...........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை