உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன்: தேவகவுடா

என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன்: தேவகவுடா

பெங்களூரு: என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார். கர்நாடகாவில் சென்னப்பட்டணம் சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் தேவகவுடா தன் பேரன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இங்கு பிரசாரம் செய்ய வந்துள்ள தேவகவுடா கூறியது, மத்தியில் பிரதம ர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் கர்நாடகாவில் ஒரு மோசமான ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. இந்த ஆட்சியை அகற்றும் வரை ஒயமாட்டேன். எனக்கு 92 வயதாகிறது. 62 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை தீவிர அரசியலில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

kulandai kannan
நவ 09, 2024 19:13

கன்னடத் து கட்டுமரம். இவர், சரத் பவாரெல்லாம் சாபக்கேடுகள்.


Indian
நவ 09, 2024 14:25

சம்பாதிச்சது போதாதோ ?


Sck
நவ 09, 2024 11:38

அப்ப பாயசத்த உங்க புள்ளைங்கலே போட்டுருவானுங்களே. போதாதைக்கு பேரபுள்ளைங்க வேற படம் போட்டுட்டு இருக்கானுங்க.


Sck
நவ 09, 2024 11:35

ஐயோ சார், செத்த பிறகும் உங்கள் ஆவி கூட அரசியலை விட்டு போகாது. ஆரசியல் வியாதிகள்னு சும்மாவா சொல்றோம்.


veeramani hariharan
நவ 09, 2024 11:07

Why you are giving importance to this gentleman. I think your reporters are very effective and you will get good news around the world. Please dont give importance to him ?


vee srikanth
நவ 09, 2024 09:39

இவர் பேச்சை எல்லாம் தயவு செய்து போடாதீர்கள்


Bye Pass
நவ 09, 2024 10:19

ஷரத் பவார் பேசுவதை மட்டும் போடுங்க ...புரிய மாட்டேங்குது


RAJ
நவ 09, 2024 08:48

ரெஸ்ட் எடுங்க சார்... ரொம்ப உழைச்சுட்டீங்க... எங்காவது டூர் கீர் போய்ட்டு வரலாம்ல.. இந்தியாவுக்காக எவ்ளோதான் கஷ்டப்படுவீங்க டெய்லி கஞ்சிய குடிச்சுக்கிட்டு.. .. அநியாயத்துக்கு உழைக்கிறீங்க சார்.. பேரன் வேற வீடியோ வீடியோவ எடுத்து உழைக்கிறார்.. .. மனசு விம்முது சாரே.. .


VENKATASUBRAMANIAN
நவ 09, 2024 07:26

சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். மகன் பேரனுக்கு பயிற்சி கொடுக்கிறார் போலும்


அப்பாவி
நவ 09, 2024 07:08

மேலே போனாலும் யாரோடயாவது கூட்டணி வெச்சு அரசியல் பண்ணுங்க. உங்க ஆளுங்க மேலே இருக்காங்க.


Kasimani Baskaran
நவ 09, 2024 06:59

போலவே அடம் பிடிக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை