மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : ஒலியின் வேகம் எப்படி
27-Jan-2025
புதுடில்லி: நான் ராஜினாமா செய்யவில்லை, பதவிக்காலத்தை முழுமையாக முடிப்பேன் என்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறினார்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விளையாட்டு வீரர்கள் ஆணையத் தலைவரும் குத்துச்சண்டை ஜாம்பவானுமான மேரி கோம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளை மறுத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஒலிம்பிக் குழு தலைவர் பதவியில் இருந்து சொந்த காரணங்களுக்காக மேரி கோம் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.2012 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவரான மேரி கோம், 42, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கடந்த வாரம் தேசிய விளையாட்டு நிறைவு விழாவிற்கு ஹால்ட்வானிக்குச் சென்றார். அங்கு ஒரு வசதி குறைந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதால் அதற்கு அதிருப்தி தெரிவித்தார்.மேரி கோம் கூறியதாவது:நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. ஐ.ஏ.ஓ., குழுவில் தனது பதவிக் காலத்தை முழுமையாக முடிப்பேன். What's app குழுவில் நடந்த உரையாடலை வெளியில் சொன்னவர் மிகவும் தவறான காரியத்தை செய்துள்ளார் என்றார்.
27-Jan-2025