உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார் கொண்டு வந்தால் தான் சந்திப்பேன்: கங்கனா ரணாவத் அடம்

ஆதார் கொண்டு வந்தால் தான் சந்திப்பேன்: கங்கனா ரணாவத் அடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதாருடன் வர வேண்டும் '' என பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், ஹிமாச்சல்லின் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், என்னை சந்திக்க மாண்டி தொகுதியில் இருந்து வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வருவது அவசியம். மக்கள் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தொகுதியில் உள்ள பிரச்னைகளை வெள்ளை தாளில் எழுதி கொண்டு வாருங்கள். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் மணாலியில் உள்ள வீட்டில் என்னை சந்திக்கலாம். மாண்டி தொகுதி மக்கள், அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம். உங்களது பணி தொடர்பாக என்னை நேரில் சந்திப்பது நலம். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்ப்பு

கங்கனா ரணாவத்தின் பேட்டிக்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த விக்ரமாதித்யா சிங் கூறுகையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள், அனைவரையும் சந்திப்பது நலம். சிறிய பணியோ அல்லது பெரிய பணியோ , கொள்கை ரீதியிலான பணியோ, எந்தவித அடையாள அட்டை இல்லாமல் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜூலை 12, 2024 23:29

ஆணியே பிடுங்க வேண்டாம்!


krishnamurthy
ஜூலை 12, 2024 19:40

சரியான செயலே


DHANASEKARAN DEVAN
ஜூலை 12, 2024 18:44

சரியான வழிகாட்டுதல் அறிவிப்பே


தமிழன்
ஜூலை 12, 2024 18:23

சரியான நடைமுறைதான் ஏனெனில் காங்கிரஸ் கட்சியினர் தற்போது அடித்து விட்டு விவசாயி என்று வேஷம் போடுவார் எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அடையாள அட்டை கேட்பது சரிதான்


SUBBIAH RAMASAMY
ஜூலை 12, 2024 18:15

அவர் செய்தது சரியே.


Thangaraj Palanisamy
ஜூலை 12, 2024 17:59

Rightly said.....


Easwar Kamal
ஜூலை 12, 2024 17:52

எல்லாம் தற்காப்புக்குத்தான் அடி எப்படி விழும்னு தெரிய மாட்டெங்கேது என்ன அம்மணி சரிதானே


Senthoora
ஜூலை 12, 2024 17:45

என்ன விமான நிலையத்தை நினைத்திருப்பாங்க.


Alagusundram KULASEKARAN
ஜூலை 12, 2024 17:44

கங்கனா நீங்கள் செய்வது சரி நாடளாமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வந்தவர்கள் எம்பி அனுமதி கடிதம் கொண்டு வந்ததால் கூட சந்தோஷமாக பார்க்க வேண்டி உள்ளது நீங்கள் ஒரிஜினல் ஆதார் கொண்டு வர சொன்னது முற்றிலும் சரியான நடவடிக்கை வரும் முன் காப்போம்


Senthoora
ஜூலை 12, 2024 17:40

தப்பி தவறி விமானநிலையத்தில் நடந்த மாதிரி நடந்தால் அடையாளம் காணலாம்,


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை