உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பால் புது வரலாறு: பிரதமர் மோடி பெருமிதம்

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பால் புது வரலாறு: பிரதமர் மோடி பெருமிதம்

வாரணாசி: லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது, என பிரதமர் மோடி பேசினார்.3வது முறையாக பிரதமராகபதவியேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார்.இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க இத்தாலி சென்றேன். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். இந்த தேர்தலில் 31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டு உள்ளனர். தேர்தலில் அதிக பெண்கள் ஓட்டுப் போட்டது இந்தியாவில் மட்டுமே. இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக உள்ளது.நமது ஜனநாயகத்தின் பலம் தான், ஒட்டு மொத்த உலகத்தையும் ஈர்க்கிறது. ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக்கிய வாரணாசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது. ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ந்து 3வது முறையாக அமைவது அரிதானது. ஆனால், இந்திய மக்கள் அதனை செய்து காண்பித்து உள்ளனர். இது இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதற்கு பிறகு, இந்தியாவில் வேறு எந்த அரசும் அதே போன்று அமையவில்லை.மக்களின் கனவுகளை நிறைவேற்ற அனைத்தையும் செய்வேன். நான் வாரணாசியை சேர்ந்தவன். கங்கை தாய் என்னை தத்தெடுத்து விட்டாள். வாரணாசி மக்கள் என்னை 3வது முறையாக எம்.பி.,யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமர் ஆகவும் தேர்வு செய்துள்ளனர். கடவுள் விஸ்வநாதர், கங்கை தாயின் ஆசியினாலும், காசி மக்களின் அன்பால், 3வது முறையாக நாட்டின் பிரதான சேவகராக வந்துள்ளேன்.பிரதமர் விவசாய உதவி நிதி திட்டம் உலகின் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தால் 1 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 3.25 லட்சம் கோடி நிதி விவசாயிகளுக்கு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.நமது பொருளாதாரம் வளர்வதில், விவசாயிகள் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளோம். பெண்களையும், விவசாயிகளையும் பலப்படுத்தவே எனது 3வது ஆட்சி காலத்தை துவக்கி உள்ளேன். 21ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் பெரிய 3 வது பொருளாதார நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்
ஜூன் 19, 2024 12:11

ஆம். உண்மையிலேயே மக்கள் புதிய வரலாற்று தீர்ப்பை தந்துளார்கள். 370, 400 என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவர்களை ஒரே அடியாக அடித்து 240 லேயே நிறுத்தினார்களே. அதுதான் மக்கள்.


naranan
ஜூன் 19, 2024 05:00

இவர் அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. ஜனநாயகம் வென்றது, ஜன நாயக கடமை என்பதெல்லாம் பொய். உடான்ஸ்


Easwar Kamal
ஜூன் 18, 2024 23:30

எப்படி பூசி முழுகுறானுங்க....... அயோட சாமி


ES
ஜூன் 18, 2024 23:02

What happened to winning 400 sir??


சோழநாடன்
ஜூன் 18, 2024 20:57

400எஇடங்களைப் பெறுவோம் என்று குடுகுடுப்பைக்காரர்போல் மோடி சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளதும் போச்சுடா... என்ற கதையாக பாஜகவை அறுதிப்பெரும்பான்மைக்குக் கீழே மக்கள் இறக்கிவிட்டார்கள். காங்கிரஸ் தற்போது பெற்றுள்ள 48 இடங்களில் பாதியே வெற்றிபெறாது என்று கொக்கரித்துக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற்றுள்ளது. இந்த மக்களின் மாற்றத்தை மோடி வரவேற்கிறார் என்றால் அவர் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.


அரசு
ஜூன் 18, 2024 20:33

நாய்டு, நிதிஷ் எப்போது காலை வாருவார்கள் என்ற பயத்துலேயே ஆட்சி நடத்துவது தான் புதிய வரலாறு. ஆடிய ஆட்டம் என்ன, பேசிய பேச்சு என்ன?


Senthoora
ஜூன் 18, 2024 18:50

அதுக்குதான் மக்கள் வரலாறை எதிர்பார்த்து இருக்கிறார்கள். எதனை நாட்களுக்குஉங்க ஆட்சி, நீங்களே 5 ஆவது ரவுண்டில் குறைந்த வாக்குகளில் வென்று இருக்கிறீங்க.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை