புதுடில்லி: அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணையை, இன்று (நவம்பர் 25) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) வெளியிட்டது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.போட்டி அட்டவணை:இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இந்த போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.பாகிஸ்தான் விளையாடும் அனைத்து போட்டிகளும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உட்பட, இலங்கையில் நடைபெறும்.இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், போட்டி கொழும்புக்கு மாற்றப்படும். போட்டி நடக்கும் நகரங்கள்:இந்தியா: மும்பை, டில்லி, ஆமதாபாத், சென்னை மற்றும் கோல்கட்டா. இலங்கை: கொழும்பு மற்றும் கண்டிபிரிவுகள் (குரூப்):ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியாபி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன்சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்காளதேசம், நேபாளம், இத்தாலிடி பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்இந்தியாவின் லீக் போட்டிகள்:பிப்ரவரி 7 இந்தியா-அமெரிக்கா -மும்பைபிப்ரவரி 12 இந்தியா-நமீபியா- டில்லிபிப்ரவரி 15 இந்தியா-பாகிஸ்தான்- கொழும்புபிப்ரவரி 18 இந்தியா- நெதர்லாந்து- ஆமதாபாத். 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, 2026 டி20 உலகக் கோப்பையின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.