உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திமுக அமைச்சர்கள் சொத்தை வித்தாலே, தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்: எச்.ராஜா பேட்டி

திமுக அமைச்சர்கள் சொத்தை வித்தாலே, தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்: எச்.ராஜா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'திமுக அமைச்சர்கள் சொத்தை கையகப்படுத்தி வித்தாலே தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம்' என டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. அங்குள்ள பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் .நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்றைய தினம் உறுதியாக பா.ஜ., அரசுதான் மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தேசியக்குழு கூட்டம் கூடியுள்ளது. இதனால் பா.ஜ.,வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3h78qn9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் பா.ஜ.,.கூட்டணி குறித்து நிலவி வரும் சந்தேகங்கள் இன்னும் 60 நாட்களில் தீரும். தினமும் ஒரு திமுகவின் மூத்த அமைச்சர் கோர்டில் குட்டு வாங்குகிறார் அல்லது அமலாக்கத்துறை இடம் மாட்டி கொள்கிறார். திமுக அமைச்சர்கள் சொத்தை கையகப்படுத்தி வித்தாலே, தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம். தமிழகத்தில் பா.ஜ.,விற்கு பெரும் ஆதரவு உண்டு. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

வேலு
மார் 12, 2024 08:46

தவறான கருத்து


g.s,rajan
பிப் 17, 2024 23:25

நமது நாட்டில் இருக்கும் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடம் ,அரசியல் கட்சிகளிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி நாட்டுடமை ஆக்க வேண்டும்,அவ்வாறு செய்தால் உலக வங்கிக்கே இந்தியா கடன் கொடுக்கலாம்.கட்சி பாரபட்சம் பார்க்காமல் இதைச் செய்தால் நம் நாடு பொருளாதாரத்தில் நம்பர் ஒன்று ஆகிவிடும் .


K.n. Dhasarathan
பிப் 17, 2024 22:05

தேர்தலில் தோற்றுவிட்டு வாயை பாரப்பா , அமைச்சர்கள் சொத்துக்களை விற்றால் வாங்க தயாராக இருப்பது போல இருக்கிறது, உங்களுக்கு என்னப்பா பணத்திற்கா பஞ்சம் தேர்தல் பத்திரம், பல்லாயிரம் கோடி தீரும்போல இருக்கே?


Anantharaman Srinivasan
பிப் 17, 2024 21:27

தமிழகத்தில் பா.ஜ.,விற்கு பெரும் ஆதரவு உண்டு. இவ்வாறு எச்.ராஜா கூறினார். எலக்க்ஷனுக்கு அப்புறம் ரிசல்ட்டை பார்த்துட்டு பேசுவோமா..??


raja
பிப் 17, 2024 20:23

உண்மைதான் பிணவறையில் கூட பண மூட்டையை வைத்திருந்த கூட்டம் தான் இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம்...


MANIMARAN R
பிப் 17, 2024 17:37

துக்ளக் காமெடி தர்பார்


Seshan Thirumaliruncholai
பிப் 17, 2024 17:09

ரொட்டித்துண்டுக்கு ஓடி வருவது போல் இலவசம் உள்ள வரையில் எதற்கு கடனை அடைக்கவேண்டும். . கடன் பட்டார் நெஞ்சம் போல் மக்கள் இல்லை. கவலை எதற்கு.? அடைக்கபோவது தற்போதைய தலைமுறை இல்லை


Apposthalan samlin
பிப் 17, 2024 17:03

அம்பானி அதானி சொத்தை விற்றால் இல்லை அதானி சொத்தை விற்றால் மொத இந்தியாவின் கடனை அடைத்து விட்டு மிச்சமும் இருக்கும் . ஹ ராஜ அவர்களே


வெகுளி
பிப் 17, 2024 16:59

முதல் குடும்பத்தின் சொத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இந்தியாவின் மொத்த கடனையும் அடச்சுடலாம்...


Bharathi
பிப் 17, 2024 16:53

Seiz them and settle


மேலும் செய்திகள்





புதிய வீடியோ