உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

டில்லியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சாணக்யபுரி வீட்டில் இருந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜிதேந்திர ராவத், 40, இன்று (மார்ச் 07) காலை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.டில்லி சாணக்யபுரியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜிதேந்திர ராவத் வசித்து வந்தார். இவருக்கு வயது 40. இவர் இன்று காலை 6 மணிக்கு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த ஜிதேந்திர ராவத்

* உத்தரகண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜிதேந்திர ராவத். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.* இவரது மனைவி மற்றும் குழந்தைகள் டேராடூனில் வசிக்கின்றனர். இவர் சிறிது காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.* டில்லியில் தனது தாயார் உடன் ஜிதேந்திர ராவத் வசித்து வந்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: அந்த அதிகாரி பல நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். அவரது விபரீத முடிவிற்கு தெளிவான காரணம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் எங்களுக்கு காலையில் வந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kalyan
மார் 07, 2025 21:45

ஐ எப் எஸ் தேறினால் பழைய நாட்கள் போல உடம்பு நலுங்காமல் வேலை செய்து உலகம் சுற்றி கடைசியில் வெளி நாட்டில் செட்டில் ஆகலாம் என்று நினைத்திருப்பார் பாவம் . பி ஜே பி ஆட்சியில் ஒவ்வொரு வினாடியும் கவனமாகவும் சாதுர்யமாகவும் இருப்பதோடு கடின உழைப்பும் தேவை என்பதை திரு ஜெயசங்கர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் 5 நாட்களில் 5 நாடுகளுக்கு பயணமும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதும் - தூக்கம் குளியல் மற்றும் ஒப்பனை எல்லாம் பயணிக்கும்போது விமானத்தில் தான் நட்சத்திர ஹோட்டலில் அல்ல- நம் பிரதமர் சாதாரணமாக செய்வது தானாம் . அதனால் மன உளைச்சல் ஆகியிருக்கலாம் . பாவம்


user name
மார் 07, 2025 14:26

பி ஜே பி அரசு எல்லா அரசு அதிகாரிகல் முதல் நீதிபதி வரை பல்வேறு அழுத்தங்களை குடுத்து வருகிறது, நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தங்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தது குறிப்பிட தக்கது.


Laddoo
மார் 07, 2025 15:52

200 ரூவாவுக்கு இவ்வளவு வாயடிக்கக்கூடாது


வாய்மையே வெல்லும்
மார் 07, 2025 14:19

கூறினால் கோபிச்சுக்காதீங்க.. இந்த காலத்து மக்களுக்கு பொறுமை மிகமிக அவசியம். அது இல்லையென்றால் வண்டிமாடு விலகி குடைசாஞ்சிடும். கல்யாணம் செஞ்சா பத்தாது.. விட்டுக்கொடுத்தல் தான் வாழ்க்கையின் வெற்றி கனி. எல்லோரும் முகரையை தூக்கி வெச்சி சண்டைபோட்டு கொண்டால் விபரீதம் தான் தீர்வு .


Mario
மார் 07, 2025 13:52

பிஜேபி ஆட்சியின் சிறப்பு


Laddoo
மார் 07, 2025 15:53

பிரட் & பன் பார்ட்டி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை