உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமாயணத்தை கேலி செய்த ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்

ராமாயணத்தை கேலி செய்த ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்

மும்பை: ராமாயணத்தை கேலி செய்து நாடகம் நடத்திய மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் நான்கு பேருக்கு, தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் மத்திய அரசின் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. நாடு முழுதும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, கடந்த 31ம் தேதி நடந்த கலை விழாவின் போது, ஹிந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை தழுவி, 'ராஹோவன்' என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டது. பெண்ணியத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த நாடகத்தின் வாயிலாக ராமாயணத்தை அவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய நாடகக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள், நாடகத்தை நடத்திய மாணவர்கள் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது தொடர்பான தீவிர விசாரணைக்குப் பின், நாடகத்தை ஏற்பாடு செய்த மாணவர்கள் நான்கு பேருக்கு தலா, 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இது, ஒரு செமஸ்டருக்கு மாணவர்கள் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்துக்கு சமமாகும். மேலும் நான்கு மாணவர்களுக்கு தலா 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூனியர் மாணவர்களுக்கான விடுதி வசதியும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் அபராதம் கட்ட வேண்டும்; இல்லையென்றால் கூடுதல் தண்டனைகள் வழங்கப்படும் என, ஐ.ஐ.டி., நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

nirmal kumar
ஜூன் 21, 2024 13:14

சரி தான்.. நீங்கள் வாழும் காலம் மட்டுமே உங்களுக்குத் தெரியும். அந்தக்காலத்தில் நடந்தது தெரியாது அல்லவா ? அதனால அமைதியா இருக்கனும். ஏத்துக்கறதுக்கு எதுவும் கற்க வேண்டியது இல்லை. ஒன்றை எதிர்க்க வேண்டும் என்றால் நிறைய கற்க வேண்டும்


bal
ஜூன் 21, 2024 13:13

இது ஒன்னும் புதுசு இல்லையே.


Akbar Ali
ஜூன் 21, 2024 13:09

ஜனநாயகம் இல்லாத ஜன நாயக நாடு


தமிழ்வேள்
ஜூன் 21, 2024 13:52

ஹிந்துக்கள் /ஹிந்து சம்ப்ரதாயம் /ஹிந்து கிரந்தங்கள் எதிரிக்கப்படுவது தடுக்கப்பட்டால் , ஜனநாயகம் இல்லை ...ஆனால் இஸ்லாமிய சம்ப்ரதாயம் /கிரந்தங்கள் எதிர்க்கப்பட்டால் மட்டும் ஏன் ரகளை செய்து , ஊரை கொளுத்தி சர்வநாசம் செய்கிறீர்கள் ? அப்போது உங்கள் ஜனநாயகம் எங்கே போனது ?


Kumar Kumzi
ஜூன் 21, 2024 17:12

உன் தாய் நாடு பாகிஸ்தானில் ஜனநாயகம் பத்தி பேச முடியுமா


Shyam Venkat
ஜூன் 21, 2024 13:01

நீங்கள் ஒரே கருத்தை பதிவிடுவதால் மட்டுமே அது உண்மை எந ஆகாது


ram
ஜூன் 21, 2024 11:22

IIT மும்பை மாணவர்கள் சேர்க்கை கட்டணம் - ஜெனரல் Category Rs.1.30 lakhs + cut off mark 95% but at the same time, Reservation category Rs.0.00 + cut off marks 40% -. அதான் இப்படிப்பட்ட மாணவர்கள் அங்கு சேர்ந்து இதுபோல நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்கள். இதுபோல ஆட்களுக்கு கட்டணம் பிரீயாக கொடுங்கள் அனால் cut off mark அணைவருக்கும் ஒன்றாக வைத்தால், IIT தராதரம் நன்றாக இருக்கும் இல்லையென்றால் அதலபாதாளத்து போய் விடும்.


ndees
ஜூன் 21, 2024 12:34

EWS quota க்கும் சேர்த்துதான் சொல்லறீங்க, இதை EWS quota அறிமுகப்படுத்தியப்போ சொல்லிருந்த நீ நியாயஸ்தன்


Rvn
ஜூன் 21, 2024 09:05

WELLDONE . தமிழ்நாட்டிலும் இப்படித்தான் அமல்படுத்த வேன்டும்


SPA ARIVUCHUTAR
ஜூன் 21, 2024 08:48

நாம் நடை பயின்ற தளத்தில் உள்ள மேடு பள்ளங்களை பற்றி மட்டுமே ஒருவரால் பேச முடியும்.


தமிழ்வேள்
ஜூன் 21, 2024 10:38

ஆக, உங்கள் கூற்றுப்படி, ஆப்ரஹாமியரான நீங்கள் ஹிந்துக்களின் அனுஷ்டங்களைப்பற்றி விமர்சிக்க கூடாது தானே? ஏன் செய்கிறீர்கள்? உங்கள் மதத்தின் மேடு பள்ளங்களை பற்றி மட்டும் பேசுங்கள் . ஹிந்துவை தொட்டால் இனி நடப்பதே வேறு ....


Kalyanaraman
ஜூன் 21, 2024 08:34

சபாஷ். இப்படித்தான் உடனடி அபராதம் - தண்டனை என்று இருந்தால்தான் மத சுதந்திரத்தை காக்க முடியும். ஒரு மதத்தினரின் பெண்கள் தங்களை முழுவதும் மறைக்கும் உடை அணிகின்றனர். இதை பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்ல முடியுமா? பெண்ணியம், சம உரிமை போன்று எதையாவது சொல்லி ஒரு மதத்தை கேலி செய்வது சமூகத்தில் பிளவை உண்டாக்கும் செயல்.


Senthoora
ஜூன் 21, 2024 13:27

சரி, தண்டனை நல்லதே, உலக கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இராமாயணத்தில் வரும் ஹனுமானின் சாலிசா பாடியது, அதுவும் தணியடித்துவிட்டு, பிரியாணி தின்று பாடினார்கள். ஹனுமானின் கோபத்தால் தான். இந்தியா தோல்வி அடைந்தது. அப்படி பாடியவர்களுக்கு என்ன தண்டனை.


sridhar
ஜூன் 21, 2024 07:02

அது என்னவோ பகுத்தறிவு, புரட்சி, பெண்ணீயம் எல்லாம் ஹிந்து மதத்தை மட்டுமே பழிக்கின்றன., தப்பித்தவறி கூட இஸ்லாம் பக்கம் போகமாட்டார்கள் இந்த வாய்ச்சொல் வீரர்கள் .


SPA ARIVUCHUTAR
ஜூன் 21, 2024 08:49

நாம் நடை பயின்ற தளத்தில் உள்ள மேடு பள்ளங்களை பற்றி மட்டும் தான் ஒருவரால் பேச முடியும். இதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் ஓடாத ஒரு ஓடு தளத்தினை பற்றி பேசுவதற்கு உங்களால் முடியாது. கூடவும் கூடாது.


RAAJ68
ஜூன் 21, 2024 06:54

இங்கே உள்ள கருப்பு சட்டை போராளிகள் மும்பைக்குச் சென்று மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்ய தயாரா.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை