உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., செய்யாததை 10 ஆண்டில் செய்து காட்டியது பா.ஜ.,: அனுராக் தாக்கூர்

காங்., செய்யாததை 10 ஆண்டில் செய்து காட்டியது பா.ஜ.,: அனுராக் தாக்கூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹமிர்பூர்: 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாத பணியை மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்ததாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமாக 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா'வை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் துவங்கி வைத்தார். 50 நாட்களுக்கு மேலாக இந்த பிரசார யாத்திரை தொடர்ந்து வருகிறது.இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் துவங்கப்பட்டன. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாத பணியை மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்தது. இதற்காகவே 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' துவங்கப்பட்டது''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 09, 2024 01:11

காங்கிரஸ் செய்த ஒன்றை மட்டும் பாஜகவால் செய்யமுடியவில்லை. செய்யவும் மாட்டார்கள். அதுதான் ஊழல்.


A1Suresh
ஜன 08, 2024 18:38

நன்றி கெட்டவர்கள் மாலத்தீவு மக்கள் மட்டும் அல்ல . இங்கிருக்கும் சிலபேரும் தான் . மோடிஜி அளித்த நல்லாட்சி, நலத்திட்டங்கள் , உள்கட்டமைப்பு, பொருளாதார முன்னேற்றம், நீதித்துறையில் புரட்சி முதல் கோவிட் வைரசிலிருந்து காப்பாற்றியது வரை மறந்துவிட்டனர்


அப்புசாமி
ஜன 08, 2024 17:33

பாஞ்சி லட்சம் போட்டு, ரெண்டு கோடி வேலையும் குடுத்தது... மறக்க முடியுமா ?


Sivak
ஜன 08, 2024 19:08

இன்னுமா அந்த பாஞ்சி லட்சம் பயித்தியம் தெளியலையா ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ..


Narayanan Muthu
ஜன 08, 2024 17:21

ஆமாம் சரிதான். அந்த ஏழரை லட்சம் கோடி ஊழல்தானே.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி