உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி!

பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி!

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் பீஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்., - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார். 'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேலும், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்ததால், பிரசாரம் அனல் பறந்தது.தே.ஜ., கூட்டணியின் கீழ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், லோக் ஜனசக்தி, 29ல் களமிறங்கியது. மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143; காங்., 61 தொகுதிகளில் போட்டியிட்டன.இந்நிலையில், இரு கட்டங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகள் எண்ணத் துவங்கியதில் இருந்தே தே.ஜ., கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போதும் தே.ஜ., கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் வகித்தது. கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மஹாகட்பந்தன் கூட்டணி, பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஜன் சுராஜ் கட்சியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 25; 61ல் களமிறங்கிய காங்., 6 தொகுதிகளையும் வென்றுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றவில்லை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. கடந்த, 2020 சட்டசபை தேர்தலில், 75 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்த தேர்தலில் அவற்றில் பாதியை கூட வெல்லவில்லை.

தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

* சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது.* கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது.* அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது.* மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது.* கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது* கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை 7 பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை

கை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்

* பீஹாரில், சுய தொழில் துவங்க, பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை தே.ஜ., கூட்டணி அரசு தேர்தலுக்கு முன் அமல்படுத்தியது. இதன்படி, 1.3 கோடி பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் அளிக்கப்பட்டது. இது, பெண் வாக்காளர்களின் ஓட்டு சதவீதத்தை அதிகரித்தது; மேலும் நம்பிக்கையையும் விதைத்தது. * 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கியது, கிராமப்புறங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. * முதியோர் ஓய்வூதியம் 400- ரூபாயில் இருந்து 1,100 ஆக உயர்த்தப்பட்டது. * பீஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அனைத்து பொதுக்கூட்டங்களிலும், லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை காட்டாட்சி என குறிப்பிட்டார். * வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால் அதிலுள்ள நன்மை பற்றி பா.ஜ., எடுத்துரைத்தது.Gallery

வென்ற வி.ஐ.பி...; உருண்ட தலைகள் வென்ற வி.ஐ.பி.,

* விஜய்குமார் சின்ஹா, பா.ஜ., - பீஹார் துணை முதல்வர். * சம்ரத் சவுத்ரி, பா.ஜ., - பீஹார் துணை முதல்வர்.* தேஜஸ்வி யாதவ், ரா.ஜ.த., , - முன்னாள் துணை முதல்வர். * மைதிலி தாக்கூர், பா.ஜ., - பாடகி. * விஜய்குமார் சவுத்ரி, ஐ.ஜ.த., - நீர்வளத்துறை அமைச்சர் உருண்ட தலைகள். * ஜகீல் அகமது கான் - காங்., தேசிய செயலர். * சத்ருகன் யாதவ், ரா.ஜ.த., - போஜ்புரி நடிகர். * அவாத் சவுத்ரி, ரா.ஜ.த., - முன்னாள் சபாநாயகர். * தேஜ் பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதா, - முன்னாள் முதல்வர் லாலுவின் மகன்

நீடிக்கும் நிதிஷ்குமார் ராஜ்யம்; 10வது முறையாக முதல்வராகிறார்

பீஹாரின் நீண்டகாலம் ( மொத்தம் 19 ஆண்டு, 84 நாட்கள்) முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். தற்போது 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். இவரது அரசியல் பயணம்; 1951 மார்ச் 1: பீஹாரின் நாளந்தா மாவட்டத்தில் பஹ்தியாபூரில் பிறந்தார். * 1972: பாட்னா என்.ஐ.டி.,யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்து மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தார். 1973ல் மஞ்சு குமாரி சின்ஹாவை திருமணம் செய்தார். * அரசு பணியில் விலகி, அரசியலில் நுழைந்தார். 1974 - 77: நெருக்கடியை நிலைக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். * 1985 : பீஹார் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். 1987ல் யுவ லோக் தளம் கட்சி தலைவரானார். * 1989: ஜனதா தளத்தில் சேர்ந்து அதன் பீஹார் பொதுச் செயலரானார். 1994ல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடன் இணைந்து சமதா கட்சியை துவக்கினார். 1996: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்தார்.* 2000 மார்ச் 3 -10 : முதன்முறை பீஹார் முதல்வரானார். 7 நாளில் பதவி இழந்தார். * 2003: இவரது சமதா கட்சி, ஐ.ஜ.த., வுடன் இணைப்பு. 2005: தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். * 2010 : தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். 2013: பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 ஆண்டுகால தே.ஜ., கூட்டணியை முறித்தார். 2014 மே 20: தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலகி, ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கினார். * 2015 பிப்.,22: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ரா.ஜ.த.,) கூட்டணி சார்பில் முதல்வர். 2015 நவ., 20: ரா.ஜ.த., ஆதரவுடன் முதல்வர். * 2017 ஜூலை 27: ரா.ஜ.த., கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். * 2020 நவ., 16: தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர்.* 2022 ஆக. 9: தே.ஜ., கூட்டணியை முறித்து மீண்டும் ரா.ஜ.த., - காங்., கூட்டணி சார்பில் முதல்வர். * 2024 ஜன. 28: ரா.ஜ.த., - காங்., கூட்டணியில் இருந்து விலகல். மீண்டும் தே.ஜ., கூட்டணி(பா.ஜ.,) சார்பில் முதல்வர்.* 2025 நவ. 14: 2025 சட்டசபை தேர்தலில் ஐ.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வெற்றி. நிதிஷ் மீண்டும் முதல்வராகிறார்.

எடுபடாத 'வியூகம்'

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தலின் போது வியூகம் வகுத்து கொடுத்து வெற்றி பெறச் செய்தவர் பிரசாந்த் கிஷோர். பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தோம்; நாம் ஏன் கட்சி துவங்கி தேர்தலில் வென்று முதல்வர் ஆகக்கூடாது என, அவர் மனதில் தோன்றியதோ என்னவோ, சொந்த மாநிலமான பீஹாரில் ஜன் சுராஜ் கட்சியை துவங்கினார். பீஹார் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்தார். 'ஹீரோ' ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், கடைசியில், 'ஜீரோ' தான் ஆனார். 238 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி ஓரிடத்தில் கூட தேறவில்லை. பல தொகுதிகளில் டிபாசிட் இழந்தது.

ராகுலால் மண்ணை கவ்விய தேஜஸ்வி?

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தேதியை, அக்., 6ல் தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் கமிஷன் உதவியுடன் ஓட்டுகளை பா.ஜ., திருடுவதாக குற்றஞ்சாட்டிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அதை கண்டித்து, பீஹார் முழுதும், ஆக., - செப்., வரை வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் பேரணி நடத்தினார். அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் இந்த பேரணி நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பீஹார் பக்கமே ராகுல் தலைகாட்டவில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா என, பா.ஜ., நட்சத்திர பட்டாளமே பீஹார் தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட நிலையில், ராகுலோ வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவரை நம்பி கூட்டணி வைத்த லாலு மகன் தேஜஸ்வி, தனி ஆளாக பீஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். செல்லுமிடங்கள் எல்லாம், ராகுல் எங்கே என்றே பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். சொந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை நிகழ்வில் கூட ராகுல் பங்கேற்வில்லை. அந்தளவுக்கு அவர் 'தீவிரம்' காட்டினார். கடைசியாக, செப்., 1ல் வாக்காளர் உரிமை யாத்திரையை முடித்த ராகுல், 56 நாட்களுக்கு பின், பெயரளவுக்கென்று, அக்., இறுதியில் பீஹாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும், ஓட்டு திருட்டு என்ற அரைத்த மாவையே அரைத்தார். தனித்து போட்டியிட்டு இருந்திருந்தால் கூட, கடந்த முறை போல் தேஜஸ்வி வெற்றி பெற்றிருக்கலாம் என, பீஹார் அரசியலை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆச்சரியம் அளிக்கிறது

பீஹார் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கின்றன. நியாயமற்ற முறையில் தேர்தல் நடப்பதால் நாம் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம். - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

babu
நவ 15, 2025 17:44

பாஜக தேர்தல் ஆணையம் கூட்டணி அமோக வெற்றி


பேசும் தமிழன்
நவ 15, 2025 19:12

ஆமாம் தமிழ்நாட்டில் நாங்கள் (திமுக) வெற்றி பெற்றால்... அது மக்களின் தீர்ப்பு.... அதே பீகாரில் பிஜேபி வெற்றி பெற்றால்.... அது முறைகேடு..... என்னைய்யா உங்க நியாயம்..... உங்களுக்கு வந்தா ரத்தம்.... அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா ???


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2025 19:32

நான் பிடித்த முயலுக்கு மூன்றே காலு என்று சொல்லுவது போல இருக்கு , அப்படியே உங்க "அப்பா"ரை தேர்தல் நடக்கும் எல்லா இடத்துக்கும் ஒரு எட்டு போயி வர சொல்லுங்க பாய்


krishna
நவ 15, 2025 21:17

ARAI VEKKADU BABU MURASOLI PADITHU MUTTALA ALAYAADHE.SIR ENDRAAL ENNA ENA UMMAKKU PADITHAALUM PURIYAADHU SONNALUM PURIYAADHU.MURASOLI UBAYAM .VAAZHTHUKKAL.


Raman
நவ 15, 2025 17:00

If one would work through all the comments, could see how much majority of the vasagargal wanted honest clean good governance.. alas, how the results are always other way ? If we cant support team Modi in the upcoming state election, dark days after that.. hopefully good sense to prevail and every citizen in TN must get to know about importance of clean and honest government..


சந்திரன்
நவ 15, 2025 14:30

பிஜேபியின் பிரச்சார பீரங்கி ராவுல் வின்சி. ராவுல் உள்ள வரை பிஜேபியை அசைக்க முடியாது


Natchimuthu Chithiraisamy
நவ 15, 2025 14:26

பிஹார் இளைஞர்கள் போல், முதல்வர் ஆவதற்கு முன்னாளில் பின்னாளில் பல இடங்களுக்கு மாறி மாறி போய் இருக்கிறார். இதனை ஆண்டுகாலம் ஆண்டும் மொத்த சொத்தே 70000 கோடி தானம் ஆனால் தமிழ் நாட்டில் 12 லட்சம் கோடி சொத்து என்கிறார்கள்.


Rajarajan
நவ 15, 2025 13:58

அது என்ன அப்படி ஒரு சிறப்பு பா.ஜ.க.விருக்கு வடக்கே ? தெற்கில் மட்டும் சிறப்பு இல்லை. அது ஒன்றுமில்லை. வடக்கே இருக்கும் மக்கள், இந்தியர் என்ற எண்ணத்தில் ஒற்றுமையாக இருந்தால் தான், நாடு நம்முடையது ஆகும் என்று நினைக்கின்றனர். சர்தார் படேல் நாட்டை ஒருங்கிணைத்தார் என்று அவரை தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். ஆனால், தெற்கே ? தமிழ்நாடு மட்டும் தான் தனி நாடு என்று பிரித்து வைத்து கொண்டாடுகின்றனர். நம்மவரும் பெரும்பாலும் தமிழ்நாடு என்பது திராவிடநாடு, அது இந்தியாவில் இல்லை, அதுஒரு தனிநாடு என்று தான் நினைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.


SUBRAMANIAN P
நவ 15, 2025 13:49

அதிகமாக கூட்டணி தாவி முதலமைச்சர் ஆன பட்டியலில் முதல் ஆள் இந்த நிதிஷு. ஆனா உருப்படியா ஒன்னும் செய்யல.. பிஹார் மக்களும் முட்டாள்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். திமுகவுக்கு ஓட்டுபோடுவதால் தமிழக மக்களும் முட்டாள்களே..


Against traitors
நவ 15, 2025 15:29

போத்தாம் பொதுவா கருத்து போட வேண்டாம். நிதிஷ் பல்டி மாஸ்டர் ஆனாலும் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவில்லை. லாலு கால ஆட்கள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை எல்லாம் ஒழித்தார். அவரே என்ஜினீயர். எல்லா இடமும் ரோடுகள் போட்டு வணிகம் பெருக்கினார். பெண்களுக்கு பல உதவிகள் சென்றடைந்தது. சாராய கடைகள் மூடி குஜராத் பிறகு பீகார் என்று கொண்டு வந்தார். லாலு ஆட்சி என்றாலே பயம் பிஹாரிகளுக்கு. லாலுவிற்கு யாதவ், நாட்டை பற்றி கவலைப்படாத முஸ்லீம் ஓட்டுகள்தான்


RAMESH KUMAR R V
நவ 15, 2025 11:55

பீகார் இன்னும் வளர்ச்சி அடையும்.


RAMESH KUMAR R V
நவ 15, 2025 11:51

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி. பீகார் வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் சீக்ரம் வரும்.


தேவதாஸ் புனே
நவ 15, 2025 11:20

பாஜக.... ராகுலுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.....‌


Appan
நவ 15, 2025 11:19

Congress lost touch with the majority indians longback. The current Congress leadership is in touch with only minoritirs -muslims, Chritians and Hindus minorities-SC, ST people. For Congress majority Hindus does not exists. With this how Congress can exits in India. For example few months Modi’s visit to Tamil Nadu Gangai Konda Sozapuram and the way function was celebrated – chanting Shiva slokas, thivaprapatham ,devaram etc…bring back glorius Tmail culture. For Congress Shiva does not exits and then how can Congrees conntect majority Indians. Just praying Allaho Akabar and Allalya , Congrees can not repressent majority Indians. Congress should come out of Sonia family then only Indians will look at them.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை