உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரி கமிஷனர் கைது

70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரி கமிஷனர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: ஐதராபாத்தில், 70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை கமிஷனர் ஜீவன் லால் லாவிடியா மற்றும் நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.2004ம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான ஜீவன் லால் லாவிடியா, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ.,க்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் மீது எ.ப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.அதை தொடர்ந்து ஜீவன் லால் லாவிடியா மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஐதராபாத், டில்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்த நிலையில், இன்று சி.பி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுத்தது.ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜீவன் லால் லாவிடியா மற்றும் நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் மீது ஐ.பி.சி. 120பி (குற்ற சதி)ஊழல் தடுப்புச் சட்டம் (லஞ்சம் தொடர்பான பிரிவுகள்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
மே 17, 2025 15:59

வழக்கு இருபது வருடம் நடக்கும். 20 வருடம் வரை பாதி சம்பளம் கட்டாயம் உண்டு. அப்போது கேசு இழுத்து மூடப்பட்டு அவரது 60 வயதில் பணியில் திரும்ப சேர்வார். 20 வருட முழு சம்பளம் மற்றும் ஒய்வு படிகளுடன் நல்ல முறையில் ஒய்வு பெறுவார்.


K.n. Dhasarathan
மே 12, 2025 16:35

அந்த கமிஷனரின் சொத்துக்கள் முழுதும் கைப்பற்றி அரசுடைமை ஆக்க வேண்டும், தண்டனை ?தூக்குத்தான், வேறென்ன ? அவன் பணத்தாலே எல்லோரையும் அடித்து வெளி வருவான், இவனுக்கு கொடுக்கிற தண்டனை பார்த்து மற்றவன் பயப்படணும்,


K.Ramakrishnan
மே 10, 2025 23:18

லஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகள் வலது கையை வெட்டவேண்டும். இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படுமா?


C.SRIRAM
மே 10, 2025 22:51

வழக்கை வழக்கம் போல வழ வழ என்று இழுக்காமல் ஒரே மாதத்தில் இவனை பணியிலிருந்து நிரந்தர பனி நீக்கம் செய்து நீதி மன்றம் சுறு சுறுப்பை காட்டுமா ? ஜனாதிபதிக்கு ஒப்புதல் கொடுக்க காலவறையை நிர்ணயித்த நீதிமன்றம் தான் முதலில் அதை செய்து காட்டட்டும்


Raghavan
மே 10, 2025 21:15

இவன் லாவிடியா வா அல்லது ...விடியா பையனா.


Keshavan.J
மே 10, 2025 21:13

லாவிடியா... ட்ராவிடியா ...எப்படி ஒத்து போகுது பாருங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை