உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.15 வரை நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.15 வரை நீட்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2025-26ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31 லிருந்து செப். 15 ஆக நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:முடிந்த 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 லிருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், 2025-26க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்குத் தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.வரி செலுத்துவோருக்கு சுமூகமான மற்றும் வசதியான தாக்கல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில், இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K RAGHURAMAN
மே 27, 2025 21:38

welcome step


V Venkatachalam
மே 27, 2025 18:57

அவகாசம் வரிசெலுத்துவோருக்கு மட்டுமல்ல. வரி விதிப்போர்க்காகதான் இந்த நீட்டிப்பு. ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வரி கட்டாமல் ஏய்ப்போருக்கு சம்மட்டி அடி விழும். போன் மெஸேஜ், வாட்ஸ் அப் மெஸேஜ், வாய்ஸ் மெஸேஜ் மற்றும் போன் அழைப்புகள் ஆராய்ந்து அலசப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை