உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது, '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. உலகின் இரண்டு பெரிய பிராந்தியங்களில் போர் நடக்கிறது. உலக பொருளாதாரத்திற்கு இந்த பிராந்தியங்கள் முக்கியமானவை. எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியம். உலகளவில் நிச்சயமற்ற சூழ்நிலையிலும், இந்தியாவின் சகாப்தம் குறித்து பேசுகிறோம். இது இந்தியா மீதான நம்பிக்கையை காட்டுகிறது.இந்தியாவில் முதலீடு செய்வது இதுவே சரியான நேரம் என முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். இது தன்னிச்சையாக நடக்கவில்லை. மத்திய அரசு செய்த சீர்திருத்த நடவடிக்கைளே காரணம். மொபைல்போன்களை இறக்குமதி செய்த நாடாக இருந்த இந்தியா, இன்று ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு துறையிலும், இந்தியாவில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்வோம். இன்று இந்தியா முன்னணி இடத்தை அடைவது மட்டுமல்லாமல், அதனை தக்க வைத்து கொள்ளவும் முயன்று வருகிறது. உள்கட்டமைப்பு துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
அக் 05, 2024 06:00

இன்னிக்கிதான் பூனாவுல மூணு தடியன்களால் ஒரு பெண் வன்கொடுமை. இதெல்லாம் அவிங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா இன்னும் பெருமைப்படுவாங்க.


kulandai kannan
அக் 05, 2024 00:07

நான் தற்போது டூரிஸ்ட் விசாவில் வெளிநாடு வந்துள்ளேன். தான் பாகிஸ்தானியர் என்று சொல்வதற்கு அந்நாட்டு நபர்கள் தயங்குவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.


கிஜன்
அக் 04, 2024 21:47

மிக உண்மை .... இன்றைக்கு இளைஞர்கள் ... பல வேலைவாய்ப்புகளுடன் இருக்கிறார்கள் ... திறன் சார்ந்த வேலைகளுக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்ற பெயர் உங்கள் உழைப்பின் மூலம் வந்திருக்கிறது .... விமானங்கள் ... பிரீமியம் ரயில்களில் ... ரயில்களின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் .... பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன .... ஒரு மத்தியதர குடும்பத்தில் ...ஒரு பெண்ணோ ...பையனோ ... நன்கு படித்துவிட்டால் போதும் .... வாழ்க்கை செட்டில் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது ... கொஞ்சம் ஏழைகளையும் கவனித்தால் நல்லது ...


Ramesh Sargam
அக் 04, 2024 21:45

ஆனால் அந்த நம்பிக்கையை சீரழிக்க காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற தேசதுரோக கட்சிகள் படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை