உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் காலவரையற்ற போராட்டம் துவக்கம்; தமிழக விவசாயிகள் பங்கேற்பு!

டில்லியில் காலவரையற்ற போராட்டம் துவக்கம்; தமிழக விவசாயிகள் பங்கேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உச்ச நீதிமன்ற குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். டில்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாய பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ம் ஆண்டு முதல் விவசாயிகள் போராடி வருகிறோம்.

போராட்டம்

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (SKM NP) சார்பில் டில்லியை நோக்கி பேரணி புறப்பட்டோம். ஹரியானா மாநில எல்லை பகுதியில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு, சாலைகளின் குறுக்கே கான்கிரீட் சுவர்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். விவசாயிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை பொருட்படுத்தாத விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே 10 மாதங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து சாலையிலேயே தங்கி போராடி வருகிறார்கள்.

நிர்ணய சட்டம்

விவசாயிகள் பேரணியை தடுப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப்சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு விவசாயிகளிடம் கருத்து கேட்டு கடந்த நவ.,22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அக்குழு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

உண்ணாவிரத போராட்டம்

விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 1990ம் ஆண்டு முதல் இன்று வரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். விவசாயிகள் பிரச்னையை மனிதநேயத்துடன் மத்திய அரசு அணுக வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று கண்னூரி பார்டரில் எஸ்.கே.எம் (NP) தலைவர் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

பேச்சு வார்த்தை

விவசாயிகள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இதனை ஏற்று மத்திய அரசாங்கம் உடனடியாக நவாப் சிங் பரிந்துரையை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருக்கிறது. ஏற்கனவே வடிகால்கள், தூர்வாரப்படவில்லை. மத்திய அரசு காவிரி டெல்டா கடல் முகத்துவார ஆறுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்யாமல் காலங்கடத்தியது.

நிதி ஒதுங்குங்க!

வெள்ள நீர் முழுமையும் விளை நிலங்களில தேங்கி நின்று குடியிருப்புகளும் விளை நிலங்களும் அழியும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதிகளை மத்திய அரசு தடை இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் துவங்கியது

டில்லியில் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் துவங்கியது. போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

SP
நவ 26, 2024 21:12

தேவை இரும்புகர நடவடிக்கை. இவர்களை பின்னணியிலிருந்து தூண்டிவிடும் தேசத்துரோகிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.


GMM
நவ 26, 2024 20:21

காலவரையற்ற போராட்டம். குடும்பம் என்ன ஆகும் விவசாய நில அபகரிப்பு பாண்டி? 30 ஆண்டுகளுக்கு முன் திராவிட கிருபையால், வாங்கிய விவசாயிகள் நிலத்தை அரசு நிர்ணயிக்கும் விலைக்கு விருபுவர்களுக்கு கொடுத்து பணம் பெற்று கொள்ளவும். இன்று அதிக லாபம் தரும் தொழில்கள் அதிகம் உள்ளன. அதனை தேர்வு செய்து வெயில் படாமல் வாழ்க.


J.V. Iyer
நவ 26, 2024 17:50

ஆரம்பிச்சிட்டாங்கையா. உடனே இவர்களை கைதுசெய்து போர்க்கிஸ்தானுக்கு அனுப்புங்க.


தஞ்சை மன்னர்
நவ 26, 2024 20:52

நீயெல்லாம் அடுத்தவாட்டி சோற்றில் கைவைக்காதே


vadivelu
நவ 26, 2024 17:49

தமிழக விவசாயிகள் டர்பன், தாடியுடன் இருக்கிறார்களே.


Perumal Pillai
நவ 26, 2024 17:35

இவனுக விவசாயிகள் இல்லை .தீவிரவாதிகள் .


M Ramachandran
நவ 26, 2024 17:31

ஆகா பழைய படி டென்ட் அடித்து கோட்டம் அடிக்க போகிறார்கள். இது குஜுரிவால் தேர்தல் வரை தொடரும்...


HoneyBee
நவ 26, 2024 17:19

இவனுக மேல் தேச துரோக வழக்கு பதிவு செய்து உள்ள வக்கனும்... நாட்டை நாசம் செய்யும் கூட்டம்


என்றும் இந்தியன்
நவ 26, 2024 16:39

விவசாயிகள் என்றால் போராட்டம் மட்டுமே செய்பவர்களா என்ன??? அப்போ நமக்கு திங்க ஒண்ணுமே கிடைக்காதே??அது எப்படி நமக்கு திங்க கிடைக்கின்றது???ஓஹோ இவர்கள் விவசயிகள் இல்லையா அப்புறம் எப்படி அந்த பெயரில் போராட்டம்??/திங்க தங்க தூங்க ரெகார்ட் டான்ஸ் எல்லாம் உண்டு இவர்கள் போராட்டத்தில் கொண்டு அந்த வண்டியில் அதன் ரொம்ப ஜாலியாக இதில் கலந்து கொள்கின்றார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 16:26

இவனுங்க வேற, அப்பப்போ தமாஷ் பண்ணிண்டு....


Kumar Kumzi
நவ 26, 2024 15:23

இவனுங்க நம்ம குஜிரிவால் விவசாயிங்க இவனுங்களுக்கு மட்டும் தா தேர்தல் காலத்தில் பிரச்சினை வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை