உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியது இண்டி கூட்டணி

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியது இண்டி கூட்டணி

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டுவர வலியுறுத்தி, தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்.பி.,க்கள் கையழுத்திட்ட நோட்டீஸ், லோக்சபா சபாநாயகரிடம் தரப்பட்டு உள்ளது. கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள விளக்குத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, அரசியல் ரீதியாக தமிழகத்தில் அனலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கடும் அமளி

இந்த விவகாரம், கடந்த வெள்ளியன்று பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அன்று பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தி.மு.க., - எம்.பி., பாலு, நீதிபதி சுவாமிநாதன் குறித்து பேசிய வார்த்தையால், பா.ஜ., - எம்.பி.,க்கள் கடுமையாக கொந்தளித்ததுடன், அந்த வார்த்தையை சபைக்குறிப்பிலிருந்து நீக்கும் அளவுக்கு கடும் அமளியும் உருவானது.விவகாரம் அத்துடன் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், நீதிபதி சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்குவோம் என்று தெரிவித்த தி.மு.க., - எம்.பி.,க்கள், அதற்கான பணியிலும் இறங்கினர்.அதன்படி, நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டுவர வலியுறுத்தும் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு, அதில், 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைகளும் நடைபெற்றன.

சந்தேகம்

இந்நிலையில், தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் நேற்று கூடிய இண்டி கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறையில் சந்தித்து, நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை வழங்கினர். நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968ன் கீழ், நடத்தை தவறுதல், திறமையின்மை என்ற விதிகளின் கீழ் நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசில், 107 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர். நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: பாரபட்சமின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சமூக நீதி அடிப்படையில் பார்க்கும்போது, நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளன. சித்தாந்த அடிப்படை வழக்குகள் குறித்து முடிவெடுப்பதில், ஸ்ரீசரண் ரங்கநாதன் என்ற மூத்த வழக்கறிஞருக்கும், குறிப்பிட்ட சமூகத்திற்கும் ஆதரவாக செயல்படுகிறார். வழக்குகள் மீது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் முடிவுகளை எடுக்கிறார். எனவே, இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 217 மற்றும் 124 ஆகியவற்றின் அடிப்படையில், நீதிபதி சுவாமிநாதனை அவர் வகிக்கும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

கிடப்பில் ஏற்கனவே இரு நோட்டீஸ்கள்

டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கட்டுக்கட் டாக பணம் கடந்த மார்ச்சில் கண் டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜூலையில் எதிர்க்கட்சிகள் வழங்கிய நோட்டீசை, ராஜ்யசபா தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்ட விவகாரம் புயலை கிளப்பியது. அவர் ராஜினாமா செய்யும் அள வுக்கு நிலைமை சிக்கலானது. பின், அதே நீதிபதிக்கு எதிராக, ஆளும் தரப்பே முன்வந்து லோக்சபா சபா நாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கி, அந்த குற்றச்சாட்டுகளை ஆராய குழு ஒன்றை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, 2024ல், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டில், சேகர் குமார் யாதவ் என்ற நீதிபதி பங்கேற்று, மத மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில், முஸ்லிம் களுக்கு எதிராக பேசியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதற்காக, அப்போதைய ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கரிடம் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் தரப் பட்டது. அதிலிருந்த எம்.பி.,க்களின் கையெழுத்துக்கள் சரிவர பொருந்தி போகவில்லை என்று கூறி, முடி வெடுக்காமல் ஜக்தீப் தன்கர் காலம் கடத்தினார். மூத்த எம்.பி., கபில் சிபல் போன் றவர்கள் கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில், திடீரென ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்து விட்ட தால், அது அப்படியே கிடப்பில் கிடக்கிறது.நீதித்துறையை அச்சுறுத்துகிறது 'இண்டி'கூட்டணி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனாலும், சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக, நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி கட்சிகள், லோக்சபா சபாநாயகரிடம் 'நோட்டீஸ்' கொடுத்துள்ளன. இது, ஓட்டு வங்கி அரசியலுக் காக, 'இண்டி' கூட்டணி நடத்தும் நாடகம். எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும், 'இண்டி' கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணிய செய்ய, அச்சுறுத்தும் ஒரு கருவியாக பதவி நீக்கத்திற்கான நோட்டீஸ் கொடுப்போம் என்பது தான், அவர்கள் சொல்லும் செய்தியா? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பாஜவாய்ப்பூட்டு போட முயற்சிதமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை, தன் தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டிய நீதிபதி “ ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் எடுத்த முன்னெடுப்பு வெட்கக்கேடானது. நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள் விரோத கும்பல். அவர்களின் அரசியல் பிழைப்பிற்காக, இந்திய நாட்டின் ஜனநாயகத் துாணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்து பார்க்க நினைக்கும் செயல் இது. இதை, தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும். நீதித்துறையை மிரட்ட முயலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும். -நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பாஜ - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
டிச 11, 2025 12:10

சனாதன தர்மத்தை எதிர்த்து, கீழ்த்தரமாகிய பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று ஹிந்துக்கள் மனு கொடுக்கவேண்டும்.


ramesh
டிச 10, 2025 18:35

ஆழ்ந்த அனுதாபங்கள் கூட்டணிக்கு


சுரேஷ் பாபு
டிச 10, 2025 17:26

இந்த வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு யோக்கியர்கள் என்று ஊருக்கே தெரியும். அதற்கு மேலும் இப்போது ஊரும் நாடும் தெரிந்து கொண்டது என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் அவர்களின் கட்சிகளும் இந்துக்களுக்கு விரோதமான வர்கள் இந்து மதத்தை வெறுப்பவர்கள் என்று 100 சதவீதம் நிரூபித்து விட்டார்கள்.


Santhakumar Srinivasalu
டிச 10, 2025 13:28

நாட்டு மக்களுக்கு இது ரொம்ப உபயோகம்?


Rajasekar Jayaraman
டிச 10, 2025 13:03

அசிங்கப்பட போகிறது திருட்டு திராவிட கான் கிராஸ் கொள்ளை கூட்டம்.


राज्
டிச 10, 2025 12:23

வரிசையாக நின்று கொண்டிருப்பவர் எவரும் யோக்கியன் அல்ல எல்லோரும் திருடர்கள் பித்தலாட்டம் செய்வதில் வல்லவர்கள். இந்திய நாட்டின் மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுகபோக வாழ்க்கை நடத்துபவர்கள்.


அருண், சென்னை
டிச 10, 2025 10:56

இவங்கயெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க சரி... மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று மக்களிடம் கேட்கவேண்டாமா? இந்த செயல்படாத கெடுகெட்ட அரசு ஆட்சி தொடரவேண்டுமா? வேண்டாமான்னு? இவர்கள் அடித்த கொள்ளை/ஊழல் பணத்தை அபகரிப்பு செய்து அரசுகஜானாவில் சேர்க்கலாமா? வேண்டாமான்னு? ஒரு சர்வே எடுங்க... திராணி இருக்கா? தைரியமான திக/திமுக அரசு?!


Ram pollachi
டிச 10, 2025 10:37

ஐய்யகோ இந்த சுவாமியை இனியும் விட்டு வைத்தால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆக வந்துவிடுவார். அதற்கு தான் இந்த பாடு.....


ராமகிருஷ்ணன்
டிச 10, 2025 09:01

இந்த கும்பல்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய பட வேண்டும்.


பேசும் தமிழன்
டிச 10, 2025 08:12

இந்த தீர்மானம் தோல்வி அடைந்து.. இண்டி கூட்டணி ஆட்களின் முகத்தில் கரியை பூசி கொள்ள போவது நிச்சயம்.. மானம் போவது அவர்களுக்கு சகஜம்.... அதெல்லாம் அவர்களுக்கு சர்வசாதாரணம்.


சமீபத்திய செய்தி