உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும்: சச்சின் பைலட் நம்பிக்கை

தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும்: சச்சின் பைலட் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறினார்.இது குறித்து சச்சின் பைலட் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என பா.ஜ.,வினர் கூறி வருவது, ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அறிக்கையை பா.ஜ., முதலில் சமர்ப்பிக்க வேண்டும். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்.மக்கள் பிரச்னைக்காக இண்டியா கூட்டணி போராடும். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும். தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஏப் 03, 2024 08:07

சச்சின் பைலட்..... இவர் தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர்... நாட்டுக்காக சேவை செய்ய அவர் இருக்க வேண்டிய இடம் பிஜெபி கட்சி தான்.... அங்கே இருந்தால் இத்தாலி மாஃபியா கும்பலுக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும்.... நாட்டுக்காக ஒரு நல்லதை கூட செய்ய விடமாட்டார்கள் !!!


Godfather_Senior
ஏப் 02, 2024 19:58

ஆமாங்க, மொத்தம் தொன்னூத்தியொன்பது சீட்டு வாங்கி அரிது பெரும்பான்மை பெற்று எதிர்கட்சியாக கூட லாயக்கில்லாம அமரப்போறாங்க


தாமரை மலர்கிறது
ஏப் 02, 2024 19:55

காங்கிரஸ் பத்து பதினைந்து சீட்கள் கூட ஒட்டுமொத்த இந்தியாவில் பெறமுடியாது


பேசும் தமிழன்
ஏப் 02, 2024 18:55

ஆசைப்படலாம்..... ஆனால் பேராசை படக்கூடாது


Raj
ஏப் 02, 2024 16:03

என்ன நம்பிக்கை பைலெட்டு


kalyanasundaram
ஏப் 02, 2024 15:50

DAY DREAM


குமரி குருவி
ஏப் 02, 2024 15:46

கனவோடு காத்திரு மந்திரி பதவி கிடைக்கும்


தத்வமசி
ஏப் 02, 2024 15:14

கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து பாவம் இவர் முதலில் ராஜஸ்தானில், கர்நாடகத்தில் எத்தனை இடங்களை இந்த புள்ளி வச்ச இந்தி கூட்டணி வெல்கிறது என்பதில் கவனம் செலுத்தவும் நானூறு சீட்டுகள் வெல்வோம் என்பது ஆணவம் அல்ல ராமர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதை உங்கள் கட்சி கோர்டில் சொல்லி இருக்க வேண்டும் ராமரைப் பற்றி உங்கள் கட்சி நீதிமன்றத்தில் என்ன கூறியது என்று கொஞ்சம் படித்துப் பார்க்கவும் உங்கள் கட்சி ஆண்ட நாட்களில் எந்தத் துறையில் ஊழல் இல்லை ? உங்கள் இதயம் தொட்டு சொல்லுங்கள் நாட்டை எந்த எந்த விதத்தில் முன்னேற விடாமல் தடுத்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் கல்வியில் எந்த விதமான சரித்திரத்தை எழுதினீர்கள் ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை