உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு இந்தியா அழைப்பு

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு இந்தியா அழைப்பு

நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரைவான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இந்நிலையில், ஐ.நா.,வில் நேற்று நடந்த விவாதத்தில் அந்த அமைப்புக்கான இந்திய ----------------துாதர் ஹரிஷ் பர்வதநேனி, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சிலில் விரைந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.இதுகுறித்து ஐ.நா.,வில் அவர் பேசுகையில், ''ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரைவாகவும், காலக்கெடுவிற்குள்ளும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஐ.நா.,வால் கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 'எதிர்காலத்திற்கான உடன்படிக்கை' என்பதை செயல்படுத்த இந்தியா முழு ஈடுபாட்டை வழங்கும்.''சீர்திருத்தம், பாதுகாப்பு கவுன்சிலின் நம்பகத்தன்மையை மேம்படுத்த வேண்டும். கவுன்சிலின் தற்போதைய வடிவம் சமகால புவிசார் அரசியல் நிலவரங்களை பிரதிபலிக்கவில்லை,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூலை 19, 2025 08:45

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவுக்கு என்றோ நிரந்தர இடம் கொடுத்து இருக்கவேண்டும்.


Poonjolai Govindasamy
ஜூலை 19, 2025 02:12

ஐக்கிய சபையில் மாற்றம் கொண்டு என்னடா பண்ண போறீங்க. சென்னை பெரும்பாக்கம் சாலையில் நடக்கும் CMRl பணியை விரைவில் நிறைவு செய்ய வேண்டிய வேலையை பாருங்க. மூன்று KM பயணிக்க 30 நிமிடம் ஆகின்றது. முதுகு வலி வருகின்றது. விளம்பர மோகம் பிடித்த முதல்வரும் பிரதமரும் நாட்டின் நிலை இது தான்.


visu
ஜூலை 19, 2025 07:28

CMRL மாநில அரசு மத்திய அரசு நிதி யுதவியுடன் செய்வது இது தாமதத்திற்கு மத்திய அரசு என்ன செய்யும்


கண்ணன்,மேலூர்
ஜூலை 19, 2025 08:05

இந்த செய்திக்கும் நீ கேட்கும் கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? நீ கேட்க வேண்டியது திருட்டு திமுக திராவிடமாடல் அரசை உன்னைப் போன்ற மந்த புத்தி மிலேச்சன்கள்தான் இந்த நாட்டின் சாபக்கேடு!


Kasimani Baskaran
ஜூலை 19, 2025 08:34

என்ன கொடுமை இது. அதிக வசதிகள் வேண்டும் என்றால் நிரந்தரமில்லாத சிரமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.


nizam
ஜூலை 19, 2025 18:10

இவ்வளவு பேசும் நீங்கள் ரஸ்யா உக்ரைன் யுத்தத்தில் ஈரான் இஸ்ரேல் யுத்தத்தில் இந்தியாவின் தெளிவற்ற நிலைபாடு ஏன் சொல்லுங்கள் மோடி. பாகிஸ்தானை துவைக்கும் உரிமை இருந்தும் டிரம்ப் ஆணைக்கு அடி பணிந்தது ஏன்


Poonjolai Govindasamy
ஜூலை 20, 2025 00:24

நீங்கள் யார், உங்கள் நிறம், ஜாதி, என்ன என்பது எனக்கு தெரியாது மனிதா. மூன்று வருடம் தேவையா மூன்று கிமீ பணியை முடிக்க? நான் திரு நரேந்திர மோடியின் தீவிர நலம் விரும்பி. அடிமை அல்ல.


புதிய வீடியோ