வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னது, விளையாட்டு சக்தியா? எங்களுக்கு 1 வருடமாக தீய சக்தி, தூய சக்தி என கேட்டு கேட்டு சலித்து விட்டது.
புதுடில்லி: ஜப்பானில் சமீபத்தில் ஆசிய பாரா விளையாட்டு போட்டி நடந்தது. இதில் சாதனை படைத்த இந்திய அணி114 பதக்கங்களை வென்று அசத்தி, பதக்க பட்டியலில் 4ம் இடத்தையும் பிடித்தது.சாதித்த விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் விழா நடந்தது. வீரர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி,அவர்களை பாராட்டினார். இவ்விழாவில் வீரர்களை பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது:140 கோடி மக்களின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்களின் சாதனையில் குடும்பம், பயிற்சியாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களையும் வாழ்த்துகிறேன்.2010ம் ஆண்டு நடந்த பாரா ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட மொத்தம் 14 பதக்கம் மட்டுமே கிடைத்தது. மாறாக இந்த முறை 114 பதக்கம் கிடைத்தது. பதக்கங்கள் எண்ணிக்கை உயர்ந்ததற்கு, உங்களின் கடின உழைப்பே காரணம். விளையாட்டு மீதான உங்களின் அர்ப்பணிப்பு தான் சிறப்பான முடிவை தந்தது. இம்முறை 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கல பதக்கங்கள், 5 புதிய உலக சாதனைகள் மற்றும் 9 ஆசிய சாதனைகளுடன் நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமிதம் அடைய செய்துள்ளீர்கள்.56 பெண் வீராங்கனைகளில் 34 பேர் பதக்கம் வென்றனர். நான்கு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றையும் நமது வீரர்களே வென்றனர். நமது தேசியக் கொடி கம்பீரமாக பறந்தது.ஆசிய பாரா விளையாட்டு போட்டி துவங்கும் இரண்டு மாதங்களுக்கு முன், ரிங்கு தனது தாயாரை இழந்தார். அந்த துயரத்திலும் மன உறுதியுடன் அவர் இருந்தார். அவர் தங்கம் வென்று அவருக்கு அர்ப்பணித்தார். அந்த நெகிழ்ச்சியான தருணம், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆழமாக பாதித்தது. நீங்கள் அனைவரும் எதிர்கொண்ட போராட்டங்களும், சாதனைகளும் இந்தியர்களுக்கு உத்வேகமாக அமைகின்றன.2014 ம் ஆண்டில் நாடு சில லட்சிய இலக்குகளை நோக்கிய பயணத்தை துவங்கியது. அப்போது சூழல் முற்றிலும் வேறாக இருந்தது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விளையாட்டு துறையில் ஈடுபடுத்த தயங்கினர். அச்சம் கொண்டனர். உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஆதரவு இல்லாமை, நிதி பற்றாக்குறை என பல சவால்கள் இருந்தன. இதனை சீரமைக்க முடியாது என மக்கள் கதறினர். நிலைமை எப்போதும் மாறாது என கருதினர். ஆனால், நீங்கள் எப்படி தளராமல் இருந்தீர்களோ அதுபோல் நாடும் தனது இலக்கில் இருந்து விலகாமல் கவனத்தை செலுத்தியது. நமது இளைஞர்களின் திறமை வீணாகக்கூடாது என கவனமாக இருந்தோம். இந்தியா ஒரு முக்கிய விளையாட்டு சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
என்னது, விளையாட்டு சக்தியா? எங்களுக்கு 1 வருடமாக தீய சக்தி, தூய சக்தி என கேட்டு கேட்டு சலித்து விட்டது.