உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிம்பிக் போட்டி நடத்தும் கனவு பலிக்குமா; இந்தியா விண்ணப்பம்!

ஒலிம்பிக் போட்டி நடத்தும் கனவு பலிக்குமா; இந்தியா விண்ணப்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு ஜோராக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டுகான போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்டது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ogv5usj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02036ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை, இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. '2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு' என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கனவு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பாமரன்
நவ 05, 2024 16:05

நான் கொயந்தையா இருந்தபோதிலிருந்து வருடா வருடம் சொதந்திர தின உரையில் பிரதமர் நாடு வல்லரசாகும்னு சொல்றது மற்றும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் நடத்த அப்ளிகேஷனை போடுவதும் நடந்துக்கிட்டே இருக்கு. ... ஆண்டி மடம் கட்டுற மாதிரி... ஏசியாட் நடத்தியே பல மாமாங்கம் ஆச்சு... இன்றைய பகோடாஸ்க்கு அது பற்றி தெரிஞ்சிருக்காது... அதையே நமக்கு திரும்ப குடுக்க மாட்டேங்கறானுவ... இதைத்தான் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ப்ளான் பண்றதுன்னு சொல்வாங்க... இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இந்தியா ஒலிம்பிக் நடத்த வாய்ப்பில்லை... நம் கட்டமைப்புகள் அவ்வளவு மோசம்... ஏத்துக்க கஷ்டம்னாலும் இதுதான் யதார்த்தம்....


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 15:54

அவமரியாதையான வார்த்தைகள் எழுதும் அநாகரிகமான ஐ டி க்களைத் திருத்தவோ சென்சார் செய்யவோ மாட்டீர்களோ? K kumzi என் மீது ஏன் தனிமனித தாக்குதல் எழுதறார்? Car race is a sports event similar to Olympics என்று அவருக்கு சொல்லவும்.


Amar Akbar Antony
நவ 05, 2024 15:40

கார் ரேஸ் நடத்தியவர்கள் சம்பளத்திற்கே கை விரித்தார்கள் ஆனால் பகட்டு எடுத்தார்கள் ஆனால் "தேசப்புதல்வரோ" அந்நிய செலாவினியை சாதனையாக கையிருப்பில் வைத்துள்ளார் பாரதத்திற்காக. கனவு மெய்ப்படவேண்டும்


ஆரூர் ரங்
நவ 05, 2024 15:25

வைகுண்டா ஆசியாட் விளையாட்டுப் போட்டியை திறமையாக மேலாண்மை செய்ததன் அடிப்படையில் ராஜிவ் பிரதமரக மிகவும் தகுதியுடைய தலைவர் எனப் பிரச்சாரம் செய்தது. அது போல கார்ரேஸ் மேலாண்மைக்காக உதய்தான் அடுத்த பிரதமராக தகுதியுள்ளவர். அவரால்தான் ஒலிம்பிக்கை நன்கு நடத்தமுடியும் என்று INDIகூட்டணி தீர்மானம் நிறைவேற்றலாமே


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 17:40

நல்ல ஐடியா. ஆனால் கலைஞர் ஸ்டாலின் வழியில் உதயநிதி யும், "பிரதமர் ஆக மாட்டேன். என் உயரம் எனக்குத் தெரியும் " னு சொல்லிடுவார். அதுல பாருங்க INDI கூட்டணித் தலைவர்கள் யாரும் இந்த பக்கத்தைப் படிப்பதும் இல்லை. படிச்சாலும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. சிரிச்சிட்டு போயிடுவாங்க.


ديفيد رافائيل
நவ 05, 2024 15:23

Car race பொதுமக்கள் பயன்படுத்தும் road block ? பண்ணி பண்ணானுங்க olympic game அந்த மாதிரி நடக்காது


Senthoora
நவ 05, 2024 14:11

வரமாட்டோ, வரமாட்டோம் வரவே மாட்டோமுங்க.


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 13:49

கார் ரேஸ் நடத்திய போது, அதுக்கு நிதி இல்லை, இதுக்கு நிதி இல்லை, கார் ரேஸ் தேவையா என்று கூப்பாடு போட்டவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


Kumar Kumzi
நவ 05, 2024 14:09

ஒலிம்பிக் போட்டிக்கும் கார் ரேசுக்கும் என்ன சம்பந்தம் கூமுட்ட


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை