உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலத்தீவுக்கு பிரச்னை என்றாலே, முதலில் உதவி செய்வது இந்தியா! சொல்கிறார் பிரதமர் மோடி!

மாலத்தீவுக்கு பிரச்னை என்றாலே, முதலில் உதவி செய்வது இந்தியா! சொல்கிறார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் என்பது நமது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=80672cqi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பொருளாதார உறவு

பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். மாலத்தீவு, தேசிய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான எங்கள் ஒத்துழைப்பைத் தொடருவோம். வரும் காலத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவுகள் UPI மூலம் இணைக்கப்படும். பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதில், நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். மாலத்தீவு உடன் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது.

நட்பு நாடு

இந்தியா மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு. நமது அண்டை நாட்டு கொள்கையில் மாலத்தீவு முக்கிய இடம் வகிக்கிறது. மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
அக் 07, 2024 20:45

ஆனால் அவர்களோ நம்மிடத்தில் உதவியை பெற்றுக்கொண்டு, சீனாவுக்கு விசுவாசியாக இருக்கிறார்கள். இனிமேலாவது இந்தியாவுக்கு மட்டும் விசுவாசமாக இருக்கவேண்டும்.


Jysenn
அக் 07, 2024 20:16

இதை அவர் சொல்லணும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 19:52

மோடிக்கு மனதில் ஒன்று நினைத்து முகபாவம் வேறொன்றாகக் காட்டத் தெரியாது .... அமித் ஷா அதில் வல்லவர் .....


Palanisamy T
அக் 08, 2024 04:27

நீங்கள் சொன்னது உண்மை. மோடி அவர்கள் இனிமேல் கொஞ்சம் அமித்ஷா வாக மாறவேண்டும்.


Rasheel
அக் 07, 2024 19:16

இவனுகளை நம்ப கூடாது.


venugopal s
அக் 07, 2024 17:12

எவ்வளவு அடிச்சாலும் தாங்கறார், இவர் ரொம்ப நல்லவர் என்று மாலத்தீவு அதிபர் மனதுக்குள் சொல்லி இருப்பாரோ!


Yaro Oruvan
அக் 07, 2024 22:34

I undertand that u r Parambara UPPI... but just for Rs 200 you dont need kneel down and do what you are doing now


V RAMASWAMY
அக் 07, 2024 15:12

மாலத்தீவின் தற்போதைய அதிபர் ஓரிறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டது இன்னும் நினைவிலிருந்து அகலவில்லை. அதற்குள் நேசக்கரம் கொண்டு அணைக்க வருவதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா என்பதை கவனித்த பின்தான் எந்த ஒரு உதவியும் நம் நாடு செய்யவேண்டும்.


Palanisamy T
அக் 08, 2024 04:22

மாலத் தீவு அதிபர் அப்படி செயல்பட்டது வியப்பில்லை. மோடி நடந்துக் கொண்டதில்தான் வியப்பு ஏற்படுகின்றது. மாலத் தீவின் அதிபர் ஆட்சிக்கு வந்தப் பிறகுதான் பிரச்சனையே ஏற்பட்டது. அது அவர்களின் பிறவிக் குணம். மதச் சார்பற்றக் கொள்கையை அவர்கள் என்றும் ஏற்றுக் கொள்வதில்லை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இப்போதாவது உண்மைப் புரிகின்றதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை