உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு பாதுகாப்புக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது : பிரதமர் மோடி

உணவு பாதுகாப்புக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது : பிரதமர் மோடி

புதுடில்லி: உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.தேசிய விவசாய அறிவியல் மையத்தின் 32வது விவசாய பொருளாதார நிபுணர்களின் சர்வதேச சங்க விழாவில் மோடி பேசியதாவது: இந்தியாவில் 15 விவசாய பருவமண்டலங்கள் உள்ளன. வெவ்வேறு விவசாய நடைமுறைகள் உள்ளன. இந்த பன்முகத்தன்மை தான், உலகத்தின் உணவு பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கதிராக இந்தியா திகழ்கிறது. பெரிய அளவில் பால், பருப்பு உற்பத்தி மூலம் இந்தியா உணவு உபரி நாடாக திகழ்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு சர்வதேச கவலையாக இருந்தது. இன்று உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது.உணவு மற்றும் விவசாயத்திற்கான நமது பாரம்பரியம் மற்றும் அனுபவம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. விவசாய பாரம்பரியத்தில் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத அறிவியல் நம்மிடம் உள்ளது. சிறுதானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய ஊட்டச்சத்து பிரச்னைக்கு சிறுதானியங்கள் தீர்வாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
ஆக 03, 2024 17:45

ஆனால் அறுவடை செய்த தானியங்களைச் சேமித்து வைக்க சரியான கிடங்குகள் குளிர்சாதன சேமிப்பு வசதிகள் இல்லாமல் எப்படி உணவுப் பாதுகாப்பு சாத்தியப்படும்? இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் ஊழல் செய்யாமல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:31

உலகத்துக்கே பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் கொடுப்போம் ........ ஆனா எங்க நாட்டுல ஊழலை ஒழிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தை நசுக்குவோம் அந்த பாஞ்சி லட்ச வாக்குறுதியை இன்னும் ஞாபகம் வெச்சுருக்கானுவோ .....


Balasubramanian
ஆக 03, 2024 14:07

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் நம் கையை இனி ஏந்த வேண்டும் அயல் நாடு ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்


amuthan
ஆக 03, 2024 13:26

என்ன பாதுகாப்பு. வறுமையில் 111 இடத்தில் உள்ளோம்


SRIRAMA ANU
ஆக 03, 2024 13:25

நமது தெய்வமகன் நமது இந்திய உணவை தான் சாப்பிடுகிறாரா ?இல்லை உயர்தர காலான் மட்டும் சாப்பிடுகிறாரா? என்பதை விளக்கவும்.


Mr Krish Tamilnadu
ஆக 03, 2024 13:13

நமது பலமே, விவசாயம் மற்றும் மக்கள் தொகை. விவசாய விளைச்சல் ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். உண்டு உண்டு களிப்பதில, அந்நிய செலாவணி எப்படி கிடைக்கும்?. வட இந்தியா பொருட்களை இங்கு விற்பதை விட, வெளிநாடுக்கு ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யுங்கள். இயந்திரங்கள், பூச்சி கொல்வி மருந்து, உரங்கள் இறக்குமதியை குறைத்து, மனிதவள உடல் உழைப்பை பயன்படுத்தி நாமே செய்யலாமே. அவைகள் பயன்படுத்துவதால், வியாதி தான் இலவசமாக கிடைக்கிறது. மனித வள உடல் உழைப்பும் பயன்படாமல் வீணாகுகிறது.சிந்தித்து பயன்படுத்துங்கள் பிரதமரே.


Swaminathan L
ஆக 03, 2024 12:43

நல்ல விஷயம் தான். எனினும், உணவுப் பொருட்களில் கலப்படம், தர உறுதி விஷயங்களில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பால், வெண்ணெய், நெய் போன்று பல கோடி மக்கள் வாங்கும் பலப்பல உணவுப் பொருட்களில் இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன. உணவுப் பாதுகாப்பு என்பது பாதுகாப்பான உணவுக்கும் சேர்த்தே இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை