உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரத்துக்கு பதிலாக இந்தியா: கேரள கோரிக்கை நிராகரிப்பு

பாரத்துக்கு பதிலாக இந்தியா: கேரள கோரிக்கை நிராகரிப்பு

திருவனந்தபுரம் :பள்ளி பாடப் புத்தகங்களில், 'இந்தியா' என்பதற்கு பதில், 'பாரத்' என்ற வார்த்தை இடம் பெற்று உள்ளதை மறுபரிசீலனை செய்யும்படி, கேரள அரசு விடுத்த கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்துஉள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பள்ளி பாடப் புத்தகங்களில், 'இந்தியா' என்பதற்கு பதில், 'பாரத்' என, மாற்ற பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், என்.சி.இ.ஆர்.டி.,யின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரியும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதிலளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1ல், 'இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'இந்தியா' மற்றும் 'பாரத்' இரண்டையும், நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, இந்த இரு வார்த்தைகளையும் பயன்படுத்தலாம் என்பதை, என்.சி.இ.ஆர்.டி., ஏற்றுக் கொள்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே வேறுபாடு இல்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Svs Yaadum oore
ஜன 21, 2024 09:18

பிரபல பாடகி இசைகுயில் கே.எஸ்.சித்ரா...இவர் கேரளத்தை சேர்ந்தவர்தான் ....ராமர் கோவில் பிரதிஷ்டை நடக்கும் தினத்தில் ராம நாமம் ஜெபித்து, விளக்கேற்ற வேண்டும்' என கூறியிருந்தார்...அதற்கு கேரளா சேட்டன்களும் சேச்சிகளும் அப்படி ஒரு வெறுப்பு பிரச்சாரம் அவர் மீது .....கேரளாவில் ஹிந்து மதமே இருக்க கூடாதா ??......இசைகுயில் கே.எஸ்.சித்ராவுக்கு அவர் சொந்த கருத்து என்று எதுவும் கிடையாதா ??....ஆனால் கேரளாக்காரன் எல்லா மாநிலத்திலும் சென்று வேலை பார்ப்பான் ...கேரளா பாரதத்தில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா ??...


Svs Yaadum oore
ஜன 21, 2024 09:11

கேரள சேட்டன்கள் உள்ளுரில் வேலை இல்லாமல் நாடு முழுக்க வேலை தேடி அணைத்து மாநிலமும் செல்வார்கள் ....ஆனால் பாரதம் என்று சொன்னால் மட்டும் எட்டிக்காயா ??....


Palanisamy T
ஜன 21, 2024 05:16

பாஜக அரசு இன்று எதை நோக்கி பயணம் செய்கின்றார்கள்? ஏனென்று புரியவில்லை. வரலாற்றிலிருந்து இந்தியாயென்ற சொல்லை நிரந்தரமாக அகற்றிவிட நினைக்கின்றார்களா? திடீரென்று ஏன் பாரத் என்றசொல்லின் மேல் இத்தனை பாசம், மரியாதை அளவுக் கடந்த அன்பு


NicoleThomson
ஜன 21, 2024 05:56

மறந்து போன்றவற்றை நினைவு படுத்தி புதிய பாரதத்தை நிர்மாணிக்கிறார்கள்


Svs Yaadum oore
ஜன 21, 2024 09:08

பாரத பாக்கிய விதாதா.....தேசிய கீதமே பாரதம்தான் .....இதை என்ன திடீர் பாசம் எங்கிருந்து வருமாம் ...


Suppan
ஜன 21, 2024 14:32

பழனிசாமி ஐயா மதராஸ் எப்படி சென்னை ஆனதோ, மதராஸ் மாகாணம் எப்படி தமிழ்நாடு ஆனதோ அப்படித்தான். பாரதம் என்பது பன்நெடுங்காலமாய் இருந்து வந்துள்ளது, வந்தேறி ஆங்கிலேயன் இந்தியா என்றான் அம்புடுதேன்


DVRR
ஜன 21, 2024 19:08

ஐயோ அப்போ பாரதம் பற்றி ஒண்ணுமே தெரியாதா


Ramesh Sargam
ஜன 21, 2024 00:40

கேரளா கம்யூனிஸ்ட் அரசை, வேன்றுமென்றால் கேடுகெட்ட அரசு என்று பெயர் மாற்றம் செய்யலாம்.


வெகுளி
ஜன 20, 2024 22:01

உண்மையிலேயே சிவன் குட்டி என்பது இவரது இயற்பெயரா?... பாரதம் என்று ஏன் சொல்லக்கூடாது என்கிறார்?...


Chandhra Mouleeswaran MK
ஜன 20, 2024 23:07

சிவன் குட்டிக்கு இன்னொரு "பாரதி"யின் வந்தனம் "பாரதம்" என்பதை ஏற்றுக் கொண்டால் அது பி ஜே பி யையும் அதன் கொள்மை முடிவுகளையும் ஆதரிப்பதாக ஆகிவிடும் இல்லையா? அப்புறம் "மதச் சார்பின்மை" அவியல் என்னாவது? அதுசரி, "பாரதம்" எனும் பாரம்பரியப் பழங்காலப் பெயர் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே ஏன் வெகு கமுக்கமாக "கேரளா", "கேரளம்" ஆயிற்று? காலாவதிக் கம்யூனிஸ்ட்ட்டுகளுக்கு அவர்களுடைய "தாய் நாடு" - - வந்து - - அவர்களுக்குத்தான் "தாய்" கிடையாதே - - தந்தை நாடுகளான க்யூபா, சீனா, ரஷ்யா, வட கொரியா முதலியவை ஏதோ பரம்பரை பரம்பரையாகப் பிறந்த வீடு மாதிரி தொட்டதெற்கெல்லாம் அலட்டல்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி