உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்

அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இப்போது இந்தியப்பெண்கள் தலைமைப்பொறுப்பு வகிக்கின்றனர். உலகிலேயே அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா,'' என்று பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி பேசியதாவது: சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது 200வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார். இந்திய விமானப் படையின் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங் ரபேல் போர் விமானத்தை இயக்கினார். இன்று, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம். இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர்.துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை, ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது. இந்தியா முன்னேற வேண்டுமானால், நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, சுவாமி தயானந்த சரஸ்வதி ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நினைவு நாணயம்

தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMESH KUMAR R V
அக் 31, 2025 22:04

இந்தியா சகலகலா வல்லவன். வாழ்க பாரதம்.


Amar Akbar Antony
அக் 31, 2025 20:21

எல்லோரும் என்னமோ தமிழகத்தின் பெண்கள் மட்டுமே அதிகம் பேர் என்கின்ற மாயையை தோற்றுவிக்கின்றன. ஆனால் அது மலையாளிகள் உள்ள கேரளா தான். இப்போ பாருங்க திராவிடன் என்று உருட்டுவான் உபி சுகள்.


Gnana Subramani
அக் 31, 2025 19:49

மாநில வாரியாக பெண் பட்டதாரிகள் விவரங்களை வெளியிட வேண்டும்


Priyan Vadanad
அக் 31, 2025 19:40

நாட்டின் 140 கோடிக்கும் அதிகமான ஜனத்தொகையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


ManiK
அக் 31, 2025 19:27

அறிவாளி ஸ்டாலினுக்கு பிட்பேப்பர் போதும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 19:10

ஆனாலும் இவரு தன்னுடைய டிகிரி சர்ட்டிபிகேட்டை கேட்டா காட்டமாட்டார்.


vivek
அக் 31, 2025 20:29

சமச்சீர் ஜெய்ஹிந்த் எவ்வளவு படிப்போ....ஆனால் இருப்பது டாஸ்மாக்


திகழ்ஓவியன்
அக் 31, 2025 21:06

அவர் என்ன வெச்சிக்கிணு வஞ்சகமா செய்கிறார் , என்ன படித்தவர்கள் ALUMINI என்று நண்பர்கள் உடன் கூடுவோம் , இவர் கூட படித்த நண்பர் ஒரு பேர் சொல்லவில்லையே ?


திகழ்ஓவியன்
அக் 31, 2025 18:35

இதில் பெருமை கொள்ளவேண்டியது நாங்கள் TN இல் தான் 90.5 % பெண்கள் உயர்கல்வி ஆகவே இதை ஸ்டாலினு க்கு அனுப்பி வையுங்க


vivek
அக் 31, 2025 20:30

இங்குதான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா முட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை