உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக 9% வளர்ச்சி தேவை; ரகுராம் ராஜன் கணிப்பு

2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக 9% வளர்ச்சி தேவை; ரகுராம் ராஜன் கணிப்பு

புதுடில்லி: ''2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக 8 முதல் 9% பொருளாதார வளர்ச்சி தேவை'' என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கணித்துள்ளார்.இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் கூறியதாவது: இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி 6.5% என்பது மிகவும் சிறந்த வளர்ச்சி தான். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக 8 முதல் 9% பொருளாதார வளர்ச்சி தேவை. தற்போது, இந்தியாவின் தருணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களில் சிறந்து விளங்க வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

வளர்ச்சியைத் தக்க வைக்க இந்தியா தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது மைல்கல் ஆகும். ஆனாலும் இந்த நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி முன்னேறுவோம். இதற்கு இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகள் ஆகலாம். நாம் ஒரு நல்ல பாதையில் செல்கிறோம் என்பதற்கான சான்றாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் தனிநபரின் வருமானம் அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளில் நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.ஏற்றுமதியை அதிகரிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய முடியும். இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sudha
ஜூன் 04, 2025 21:26

9% இல்லன்னா இந்தியா மூழ்கி போய்டும், அவ்ளோதானே, ஓகே, இடத்தை காலி பண்ணுப்பா.


Venkatesh
ஜூன் 04, 2025 20:52

நீங்க புடுங்கிய ஆணிகள் போதும்.... உமது சாயம் வெளுத்து வெகு நாட்கள் ஆகி விட்டது


Anand
ஜூன் 04, 2025 15:51

இவன் வாயில இருந்து நல்ல வார்த்தை எப்போதும் வராது


C S K
ஜூன் 04, 2025 09:42

டியர் சார், நீங்கள் இந்தியாவை முடிந்த அளவுக்கு மட்டம் தட்டியே பேசினால் போதும். இந்தியா சாதித்து விடும். பசிக்கு என்ன சாப்பிடுவது, வயிற்று வலிக்கு என்ன செய்வது என்பதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். வரும் காலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது என்ன செய்ய வேண்டும் என்கிற பாடத்தை அந்த கும்பலுக்கு சொல்லிக் கொடுங்கள். மற்றபடி தற்போது இருப்பவர்கள் அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதை செய்வார்கள். அமெரிக்காவை காப்பாற்ற ஆவன செய்யுங்கள் அது போதும்.


Ram
ஜூன் 04, 2025 09:29

என்னது காமெடி பீசு திரும்பி வந்துடுச்சா


m.arunachalam
ஜூன் 04, 2025 09:24

வளர்ச்சி அடைந்த நாடு / இந்தியா என்றால் என்ன? இது ஒரு அலங்கார வார்த்தை என்று தான் தெரிகிறது. அதிக அளவில் வேகமாக இலவசங்கள் மூலம் நோயாளிகளையும், உழைக்க விருப்பமில்லாதவர்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். தெளிதல் நலம் .


நிக்கோல்தாம்சன்
ஜூன் 04, 2025 09:11

கருத்து தெரிவிப்பது சுலபம் , அதற்கான வழிமுறைகளை நீங்க தமிழகத்திற்கு ஆலோசகராக இருக்கும் நேரத்திலாவது செய்ய வேண்டும் ரகுராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை