உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலி; காஷ்மீரில் திரும்பியது இயல்பு நிலை!

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலி; காஷ்மீரில் திரும்பியது இயல்பு நிலை!

ஸ்ரீநகர்: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ut87nfzg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது. நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன.இந்நிலையில், இன்று (மே 11) காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில தினங்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது. நேற்றிரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில், பதான்கோட், பிரோஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. சாலைகளில் மக்கள் வழக்கம் போல் நடந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்றிரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Bhakt
மே 11, 2025 15:30

அங்கே இருக்கற ஸ்லீப்பர் செல்சை எல்லாம் கண்டுபிடிச்சு சீக்கிரம் தூக்குங்க.


sundarsvpr
மே 11, 2025 13:50

இயல்வு நிலை என்பது ஒரு தற்காலிக நிகழ்வுதான். பூர்ண நிம்மதி என்று கருதமுடியாது. காஸ்மீர் மாநிலத்தில் தற்போதைய மாநில தலைமை மாற்றம் தேவையா என்பதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.


Tetra
மே 11, 2025 13:38

எதற்கு? அவர்களால் தேச பக்தியை கடைப்பிடிக்க முடியாது. தேசீய கீதத்தை பாட மறுத்து வழக்கு போட்டு உச்சா நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கியவர்கள் தானே. தேசப்பற்று தானாக வரவேண்டும். காஷ்மீரில் நடந்த அயோக்கியத்தனத்தை கண்டித்து இவர்கள் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தியிருக்கலாமே. செய்ய வில்லையே. அவர்களுக்கு அவர்கள் மதமே முக்கியம். தேசமல்ல.


RAJ
மே 11, 2025 13:28

மெத்தனமாக இருக்க கூடாது.. புல்லுருவிகளும்.. தேசதுரோகிகளும் இருக்கும் நாடு..


Shankar
மே 11, 2025 12:33

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்: எது சரியானது என்பதை எங்கள் பிஜேபி பார்த்துக்கொள்ளும். இந்த மாதிரி யோசனைகளை நாங்கள் ஏற்பது கிடையாது.


Chanakyan
மே 11, 2025 12:09

பிரச்சனையின் ஆரம்ப புள்ளியான காஷ்மீரிலிருந்தே தொடங்க வேண்டும். தேச பக்தி மிக்க பிரபலங்களை காஷ்மீருக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து விளம்பரப்படுத்தி டூரிசத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்த போர் அனுபவத்தை வைத்து பாகிஸ்தான் தனது ராணுவ தொழில் நுட்பத்தை மேம்படுத்தக்கூடும். இம்முறை போலவே நமது கை மேலோங்கி இருக்க நாமும் தொழில் நுட்ப ரீதியில் ராணுவத்தை மேம்படுத்த வேண்டும். அடிப்படைவாதியும் போர் வெறியனுமான பாகிஸ்தானிய ராணுவ தளபதியான அஸிம் முனீரை தொடர்ந்து கண்காணித்து நீக்க அல்லது பலவீனப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


Bhakt
மே 11, 2025 15:32

Precise strike நடத்தி போட்டு தள்ள வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 11, 2025 10:26

நம் இந்திய நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கும் இந்திய இஸ்லாமிய இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதிய பயிற்சிகள் அளித்து உருது மொழி பேசுவதால் கஷ்மீரில் மக்களோடு மக்களாக ஊடுருவ செய்து தீவிரவாதிகளை இனங்கண்டு ஆணிவேரை அறுத்தெறிய வேண்டும்.. யாரும் அறியாவண்ணம் அரசுகள் அவர்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்....!!!


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 11:27

அப்படி ங்கு கொண்டுபோய் அமர்த்தப் படுவோர்களுக்கு மண்டை குடைச்சல்தான். பாக்கிஸ்த்தான் முஸ்லிம்களோ இல்லை காஷ்மீர் முஸ்லிம்களோ யார் பக்கம் நிர்ப்பதுன்னு குழம்பலாம். அவர்களுக்கு மதம் பர்ஸ்ட் நாடு நெக்ஸ்ட். அது கிடக்கட்டும் இப்போதானே காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் மருத்துவமனை கட்டப்போறதா அறிவிப்பு வந்திருக்கு. அப்படீன்னா எழுபது ஆண்டுகளுக்குமேல் நாம் அங்கே ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்னு மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தவேயில்லைன்னு தெளிவாகிறது.


சிவம்
மே 11, 2025 09:44

குண்டு போடும் சத்தம் இல்லை என்பதே உண்மை. கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றுலா மக்கள் வருகையினால் சிறிது தலை நிமிர்ந்து நடந்தார்கள் காஷ்மீர் மக்கள். இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து அச்சம் இல்லாமல் காஷ்மீருக்கு எப்போது மக்கள் செல்கிறார்களோ அப்போதுதான் அங்கு இயல்பு நிலை திரும்பியது என்று அர்த்தம்.


Ramesh Sargam
மே 11, 2025 09:09

நேற்று ஸ்டாலின் நடத்திய பேரணியை பார்த்து பயந்து பாக்கிஸ்தான் போரை நிறுத்தியதாக பேச்சு….


அன்பு
மே 11, 2025 13:59

அவர் பேரணி நடத்தி தனது தேசப் பற்றைக் காட்ட வேண்டாம். திருமாவளவனை பிடித்து உள்ளே தள்ளி கொஞ்சம் கவனித்தால் போதும். செய்வாரா?


V Venkatachalam
மே 11, 2025 08:57

சந்தேக பேர்வழி களை சுட உத்தரவு இருக்கும் நிலையில் உடனே எமலோகம் அனுப்பி விடணும். தயவு தாட்சண்யம் கூடவே கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை