உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சத்தீவில் புது விமான நிலையம்: மத்திய அரசு திட்டம்?

லட்சத்தீவில் புது விமான நிலையம்: மத்திய அரசு திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லட்சத்தீவில் சுற்றுலாவை பிரபலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அங்குள்ள மினிகாய் தீவில் போர் விமானங்கள் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தும் வகையில், விமான நிலையம் ஒன்றை அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.லட்சத்தீவின் மினகாய் தீவில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கடந்த காலங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை பாதுகாப்பு படையும் பயன்படுத்தும் வகையில் விமான தளம் அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.இங்கு விமான தளம் அமைப்பது குறித்து முதலில் இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. தற்போது, அதனை விமானப்படை பயன்படுத்தும் வகையில் விமான நிலையமாக அமைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.இங்கு விமான நிலையம் அமைப்பது மூலம் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். சுற்றுலாவை மேம்படுத்த முடியும். தற்போது, லட்சத்தீவின் அகாட்டி தீவில் மட்டும் தான் விமான தளம் உள்ளது. இங்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பயணிகளை கையாள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:36

நம் பிரதமரை ஏளனமாக பேசிய மாலத்தீவில் கூடிய சீக்கிரம் புது ராணுவ விமான தளம் சீனா நிறுவும். பொறுத்திருந்து பாருங்கள். மாலத்தீவு கூடிய சீக்கிரம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.


Jai
ஜன 09, 2024 22:25

மாலத்தீவிவில் உள்ளதுபோல் ஆழம் குறைவான கடற்கரைகளில் water villas அமைத்து சுற்றுலா பயணிகளை இழுக்கலாம். மாலத்தீவிவில் இது போன்ற வில்லாக்களில் ஒருநாள் வாடகை 1 லட்சம் ரூபாய் என்று உள்ளது. இது போன்ற சுற்றுலா ரிசார்ட்கள் அமைக்கலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை